பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 25 ஏப்ரல், 2016

இனிமே துணி துவைப்பதே சந்தோஷமாகப் போகுது!

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் துணி துவைப்பதற்கான கடைகளை தேடி அலைவார்கள்.வெளிநாடுகளில் துணி துவைப்பது என்றால் அதற்கு அதிகம் செலவிட வேண்டும்.


இது போன்ற நிலைமைகளில் கை கொடுக்கவென்றே ஒரு துணி துவைக்கும் பை தயாராகியிருந்தது,இதில் துணி, சோப்பு பவுடர், தண்ணீர் மூன்றையும் சேர்ந்து பையை இறுக்கி கட்டி வெளிப்பக்கமாக 30 விநாடிகள் தேய்த்து அழுத்த வேண்டும். இதற்கு பிறகு அழுக்கு நீரை வெளியேற்றிவிட்டு, துணியை அலசிவிட வேண்டும். துணிகளை வெளுப்பதற்கு ஏற்ப உள்பக்கமாக பிரத்யேக அமைப்பு உள்ளது. இயந்திரம் செய்யும் வேலையை கையடக்க இந்த பை செய்து விடுகிறது. இந்நிலையில் கூடிய விரைவில் இனி வாஷிங்மெஷினுக்கு வேலை இருக்கப் போவதில்லை.

வாஷிங்மெஷின் வேலையை இனி ‘டோல்ஃபி’ (Dolfi) என்ற சிறிய கருவியே செய்துவிடப் போகிறது. ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில் நுட்பத்தில் வேலை செய்கிறது. ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் சேர்த்து, அழுக்குத் துணிகளை போட்டு விட வேண்டும். டோல்ஃபியை ஆன் செய்து வாளியில் வைத்து விட வேண்டும்.

டோல்ஃபியில் இருந்து சக்தி வாய்ந்த அல்ட்ராசோனிக் அலைகள் உருவாகி, குமிழ்களை ஏற்படுத்தும். துணிகளில் உள்ள அழுக்குகள் மாயமாகும். அரை மணி நேரத்தில் துணிகளைத் துவைத்துக் கொடுத்துவிடும். கையடக்கமான இந்த டோல்ஃபியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். வாஷிங்மெஷினை விட துணிகளை மிக மென்மை யாகக் கையாளும் டோல்ஃபி. பருத்தி, பட்டு, பாலியெஸ் டர் என்று எந்த வகையான துணிகளையும் சுத்தம் செய்து கொடுத்துவிடும்.

வாஷிங்மெஷினை விட 80 சதவிகிதம் குறைவான ஆற்றலில் டோல்ஃபி இயங்கு வதால், சத்தமே வெளியே வராது. ஜெர்மனைச் சேர்ந்த தொழிலதிபர் லெனா சோலிஸ் இதை உருவாக்கி இருக்கிறார். டோல்ஃபியை வெளியிடங்களுக்கு செல்லும் போதும் எடுத்துச் செல்லாம். சலவைக்குச் செலவு செய்யும் பணம், நேரம் மிச்சமாகும். துணி துவைப்பதே சந்தோஷ மான விஷயமாக மாறிவிடும். கடந்த ஜனவரியில் திட்டத்தை ஆரம்பித்தோம். விரைவில் விற்பனை செய்ய இருக்கிறோம். ஒரு டோல்ஃபி 7,300 ரூபாய்’’ என்கிறார் லெனா சோலிஸ்.
                                                       --- நன்றி சமூகவளைதளம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக