பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 31 மே, 2014

சொற்களுக்கான அர்த்தத்தை புகைப்படம் மூலம் விளக்கும் இணையதளம்

வோர்டியா என்கிற இணையதளம் வழக்கமான இணைய அகராதிகளைப் போல சொற்களுக்கான அர்த்தங்களை தருவதோடு மட்டுமில்லாம, அதற்கான படக்காட்சிகயையும் தந்து விளக்குது.


வோர்டியா தளத்திற்குச் சென்று இலவச உறுப்பினர் கணக்கு ஒன்றை தொடங்கிக் கொள்ள வேண்டும். கூடவே, உறுப்பினர் மாணவரா அல்லது ஆசிரியரா என்பதையும் குறிப்பிட வேண்டும். தேடுபெட்டியில் எந்த வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அர்த்தத்தோடு, படக்காட்சியும் வந்து நிற்க்கும் . கூடவே, அச்சொல்லின் முழு வரையறை, சொற்பிறப்பு, உதாரணங்கள் மற்றும் சொல்லின் தொடர்புடைய வார்த்தைகள் வரும் . உதாரணமாக,School என்ற வார்த்தைக்கான வீடியோ விளக்கத்தில், நிபுணர் ஒருவர், பள்ளியின் சிறப்பம்சம் குறித்து விளக்குவார்.

பெரும்பாலான வார்த்தைகளுக்கு வீடியோ விளக்கம் கிடைத்து விடுகிறது. எனினும், சில வார்த்தைகளுக்கு வீடியோ விளக்கம் பதிவு செய்யப்படாமல் உள்ளது . அது போன்ற சொற்களுக்கு நாமே கூட வீடியோ விளக்கத்தை தரவேற்றலாம். மேலும், இணையப் பயனாளர்கள், தங்களுக்குப் பிடித்த, தங்களிடம் உள்ள சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்தத் தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

தற்போது பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில் கணினி விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், தினமும் ஆன்லைனில் மாணவர்களுக்கான போட்டி நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

இணையதள முகவரி: www.wordia.com அதே போல், www.enchantedlearning.com / Dictionary.html என்ற இணையதளம், சொற்களுக்கான அர்த்தத்தை புகைப்படம் மூலம் விளக்குகிறது.

வியாழன், 29 மே, 2014

சூரிய குடும்பம்

புதன் : அதிவேகம் 

   சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் கோள்.விநாடிக்கு 48 கி.மீ வேகத்தில் 88 நாட்களில் சூரியனை சுற்றிவருகிறது.

வெள்ளி : அதிவெப்பம்

   சூரியக் குடும்பத்தின் வெப்பமான கோள்.இதோட வளிமண்டலத்தில 96 சதவிகிதம் கார்பன்டை ஆக்சைடு நிரம்பியிருக்குறதே இதனோட வெப்பத்துக்கு காரணம்.சராசரி வெப்ப நிலை 4600 டிகிரி செல்சியஸ்

செவ்வாய் : சிவந்த மண்

  செவ்வாய்க் கோள் சிவப்பு நிறத்துல இருக்குறதுக்கு காரணம் அதுல இரும்பு ஆக்சைடு நிரம்பியிருக்குறதுதான்.

வியாழன் : புயல் 

  வாயு மிகுந்த இந்த கோளோட எடையில்லா வளி மண்டலமும் வலுவான ஈர்ப்பு விசையும் பெரும் புயல் மேகங்கள் உருவாகக் காரணமா இருக்குது.பூமியில உருவாகுற புயலை விட மூணு மடங்கு வலுவான புயலா அது இருக்கும்.

சனி : மீதேன் மழை

  சனி கோளோட மிகப்பெரிய நிலவான டைட்டன்ல பெய்யும் மீத்தேன் மழை மூலமா ராக்கெட்டே ஓட்டலாமாம்.

நெப்டியூன் : அடர்த்தி 

  வாயுக்களால நிரம்பிய வெளிப்புறம் பனிப்படலத்தை கொண்ட நாலு கோள்கள்ல நெப்டியூன்னும் ஒன்னு.அந்த வகையில ரொம்ப அடர்த்தியானது.

நிலவு : குளிர்ச்சி 

  இங்க வளிமண்டலமே இல்லாத காரணத்தால ரொம்ப குளிர்ச்சியான துணைக்கோள் இது.இந்த நிலவோட மறுபக்கதுல இருக்குற சூரியனை பாக்காத பெருங்குழிகள் குளிர் சுரங்கங்களாக இருக்காம்.

யூரேனஸ் : தொலைவு 

  சூரியன்ல இருந்து ரொம்ப தூரத்துல இருக்குறதால இந்த துணைக்கோள் சூரியன்ல இருந்து பெறும் வெப்பதுல வெறும் 5 சதவிகிதத்தை மட்டுமே இது திரும்ப எதிரொளிக்குது.
   

செவ்வாய், 27 மே, 2014

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் ?

புதுமணத்தம்பதிகள் அம்மி மிதிச்சு அருந்ததி பாக்குறது எதுன்னு தெரியுமா?

ராமரின் குலகுருவான வஷிஷ்டரின் மனைவி அருந்ததி..இவங்க ரொம்ப ஒற்றுமையா வாழ்ந்து வந்தாங்க..அதனாலதான் வானத்துல நட்சத்திரமா வாழுற அதிஷ்டம் அடைஞ்சாங்க..இவங்களமாதிரி தம்பதிகள் ஒத்துமையா இருக்கணும்னு தான் அருந்ததி நட்சத்திரம் பாக்குறத ஒரு சடங்கா செய்றாங்க..

அறிவியல் ரீதியா பாத்தோம்னா ... "சப்தரிஷி மண்டலம்" .."சப்தம்" என்றால் "ஏழு" ..ஏழு ரிஷிகள் ஒன்னா சேந்து வசிக்குறாங்கனு புராணங்களில் சொல்றாங்க..

வானவியல் விஞ்ஞானிகள் "The  great bear constellation "-னு சொல்றாங்க..இந்த ஏழு நட்சத்திரங்களில் நாலு நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும்..மற்ற மூன்றும் பட்டம் போல இருக்கும்..இந்த பட்டத்தோட வாலில் நடுவுல இருக்குறது 'வஷிட்ட' நச்சத்திரம் என்னும் 'மிசார்' ..அதை ஒட்டி மெல்லியதாக இருக்குறது 'அருந்ததி' என்னும் 'அல்கார்'..இந்த ரெண்டு நட்சத்திரமும் ஒரே ஈர்ப்பு மையத்தோட சுழல்பவை..அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்பு உடையவை.இந்த நட்சத்திரத்தைப் போல புதுமணதம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் ஈர்ப்போட எப்பவும் வாழனும்னு சொல்றதுதான் அருந்ததி நட்சத்திரம்  பாக்குறதோட நோக்கம்..

ஞாயிறு, 25 மே, 2014

கூகுள் பற்றி கூகுள் பண்ணுவோமா?

கூகுள்ல எதப் பத்தி தேடினாலும் சுவாரசியமான விஷயத்தை அள்ளிக்கொடுக்கும் கூகுள் நிறுவனத்தைப் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் இங்க...


- > கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).

- > கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

- > கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.

- > ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு ஸ்மார்ட் போன் கேலரிக்கு

- > ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற "Don't be evil" என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்.

- > கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது.

- > கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது.

- > இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.

வெள்ளி, 23 மே, 2014

பேஸ்புக் மூலம் பண பரிவர்தனை


பல புதுமைகளையும் புது புது ஆப்ஷன்கள் வழங்கும் பேஸ்புக், சீக்கிரமே இன்னும் ஒரு புதிய ஆப்ஷன் வழங்கப்போகுது .

அதுதான் பேஸ்புக்கின் மூலம் பண பரிவர்தனை.அதாவது பேஸ்புக்கின் மூலம் பணபரிவர்தனைகளை மேற்கொள்ளலாம் என்பதே அந்த  புதிய ஆப்ஷன் .அதாவது நெட்பேங்கிங் மாதிரி.

இதன் மூலம் யாருக்கு வேணும்னாலும் சில நொடிகள்ல நாம பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம்.இதுக்கு பேஸ்புக்கில் அக்கவுன்ட் இருந்தா போதும் .

முதல்ல இந்த திட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கு வரப்போகுது .அதுக்குஅப்பறம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் வரும்னு சொல்றாங்க..



புதன், 21 மே, 2014

நீர்நிலைகளிலும் செல்லக் கூடிய சைக்கிள்

நீர்நிலைகளிலும் செல்லக் கூடிய சைக்கிளை கண்டுபிடித்திருக்கிறார்கள், தரங்கம்பாடியைச் சேர்ந்த ஹை-டெக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் நிறுவனத்தார். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கடக்க முயன்று அடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகம். இந்தப் பிரச்சினைக்கு மக்களுக்கு உதவக்கூடிய எளிமையான கண்டுபிடிப்பு இந்த சைக்கிள்" என்கிறார், ஹை-டெக் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான பாலசுந்தரம்.

இரண்டாகப் பிரிக்கப்படும் பழைய லாரி டயர் டியூப், சைக்கிளின் முன் மற்றும் பின் சக்கரங்களில் இணைக்கப்படுகிறது. சைக்கிளின் பின் சக்கரத்தில் இரும்புத் தகடால் செய்யப்பட்ட சிறப்பு விசிறி ஒன்றும் இணைக்கப்படுகிறது. காற்று நிரப்பப்பட்ட லாரி டயர் டியூப்பினால் மிதக்கும் சைக்கிள், பெடலை அழுத்தும் போது சுழலும் விசிறியினால் நீரில் முன்னோக்கிச் செல்கிறது. மணிக்கு 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் இதில் தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கக் கூடிய விலை மலிவான பொருட்கள். எனவே, சாதாரண சைக்கிளை மிதக்கும் சைக்கிளாக மாற்ற ஆகும் செலவு, தோராயமாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே.

இம்முயற்சியில் ஹை-டெக் நிறுவனத்தினரோடு வேதாரண்யம் செம்போடை ஆர்.வீ. பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் சூர்யா, விஜய், சூர்ய பிரகாஷ், முகுந்தன், முருகதாஸ் மற்றும் வல்லவராயன் ஆகியோரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

திங்கள், 19 மே, 2014

பூச்சிக்கொல்லிகளும் பாதிப்புகளும்

விவசாயத்துல பயன்படுத்துற பூச்சிக்கொல்லிகலில் சில மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. இந்தியாவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள 67 வகை பூச்சிக்கொல்லிகள் தடையின்றி உபயோகப்படுத்தப்படுது. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளால மனிதனுக்கு பாதிப்பு வரும்னு சொல்றாங்க தெரியுமா ??

நாளமில்லா சுரப்பிகளைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லிகள்

அசிபெட், மிதொமைல், திறம், பைபென்த்ரின், பாஸ்போமிடன், சைனெப், கார்பரில், குனல்போஸ்,சைரெம், கார்போபுரன், ட்ரைக் லோரன், டி.டி.டீ., அட்ரசின், டியாசினான், டயுரோன், டைகொப்ஹல், ட்ரை ப்ளுரலின், என்டோசல்பான், கார்பெண்டசிம்,பநிதரோதியன், லின்டேன், பினரிமொல், மலத்தியன், மன்கோசப்.

இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லிகள்

பைபென்த்ரின், டெல்டா மேத்ரின், டைமிதொயட், பிந்த்ரோதியன், லினுரன், பெநோமில், கார்பெண்டசிம், டைநோக்கப், திறம், ட்ரை டிமொர்ப்.

மரபணுவைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லிகள்

கார்பரில், ட்ரை ப்ளுரலின், பெநோமில், கார்பெண்டசிம், திறம், டைக்லோர்வோஸ், டைமிதொயட், ஜிரம்

கருவினைப் பாதிக்கும் பூச்சிக்கொல்லிகள்

கார்பரில், திறம், ட்ரை டிமொர்ப், பெநோமில், டினோக்கப், டைமிதொயட் ஜிரம்,

இந்த பட்டியலை தொகுத்த லட்சுமி நரசிம்மன் மற்றும் குழுவின் தொடர்புக்கு: 94453 77575

                                            --- வார இதழில் இருந்து