பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 24 ஏப்ரல், 2013

8 நாள் மஹாராஜா !!!!



'மஹாராஜா எக்ஸ்பிரஸ் '-பேரே நல்லா இருக்குல்ல.2010-ஆம் ஆண்டுல இருந்து இந்தியாவுல இயக்கப்படுற இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ்-ல பயணம் பண்றது தான் ஆசியாவிலேயே ரொம்ப காஸ்ட்லியான ட்ரைன் பயணம்.ஏன்னு கேக்குறீங்களா?


இந்த ட்ரைனோட கம்மியான டிக்கெட் எவ்ளோ தெரியுமா ?
ஒரு பயணிக்கு ஒரு நாளுக்கு 800 டாலர்.நம்ம நாட்டோட பணத்தின் படி ,சுமார் 42,600 ரூபாய்(சாப்பாடோட).அதுவும் இதுல இருக்குற டீலக்ஸ் பெட்டிக்கு தான்.அதிகபட்ச கட்டணம் 2500 டாலர் அதாவது இந்திய பணத்தின் படி 1,33,000 ரூபாய்(சாப்பாடோட) .இது பிரசிடன்சியல் சூட் -க்கு .


மொத்தம் 8 நாள் பயணத்துல நாட்ல(இந்தியா) முக்கியமான சுற்றுலா தலங்களை வலம் வருது இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ் .


ரயில்வேயின், இந்திய ரயில்வே கேட்டரிங் அன் டூரிசம் கார்பரேஷன் (ஐ ஆர் சி டி சி )நிறுவனமும் ,தனியார் துறையை சேர்ந்த காக்ஸ் அன் கிங்க்ஸ் இந்தியா லிட் நிறுவனமும் கூட்டுத் தொழிலா இந்த ரயிலை இயக்குறாங்க.


தங்குற அறைகள் ,ஓய்வு கூடங்கள் ,நட்சத்திர விடுதி போன்ற உணவு கூடங்கள் என 24 பெட்டிகள், ஏகப்பட்ட வசதிகளோட  இருக்குற இந்த ரயில்ல மொத்தம் 88 பயணிகள் மட்டும் தான் பயணம் செய்ய முடியும்.


எங்க எங்க இந்த 'மஹாராஜா எக்ஸ்பிரஸ் '-ல போகலாம் ?

1.இந்தியாவின் பண்பாடு (ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா )
எத்தனை நாட்கள் :      7 இரவு/9 பகல்
எங்க எங்க போகலாம் : மும்பை - அஜந்தா - உதய்பூர் - ஜோத்பூர்-பிகனேர் -ஜெய்பூர் - ரந்தம்போர் - ஆக்ரா-டெல்லி

2.இந்தியாவின் கருவூலம் (ட்ரஷர் ஆஃப் இந்தியா )
எத்தனை நாட்கள் :      3 இரவு/4 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் - ஜெய்பூர்-டெல்லி

3.இந்தியயாவின் பொக்கிஷம் (ஜெம்ஸ் ஆஃப் இந்தியா)
எத்தனை நாட்கள் :      3 இரவு/4 பகல்
எங்க எங்க போகலாம் :டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் - ஜெய்பூர்-டெல்லி

4.இந்தியக் கலைக்கூடம் (இந்தியன் பனோரமா )
எத்தனை நாட்கள் :      7 இரவு/8 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஜெய்பூர்- ரந்தம்போர் -பாடேஹ்பூர் - ஆக்ரா-கலிலோர் -ஒர்ச்ஹா -கஜுரஹோ -வாரனாசி-லக்னோ -டெல்லி

5.ஒளிரும் இந்தியா  (இந்தியன் ஸ்ப்லண்டர்)
எத்தனை நாட்கள் :      7 இரவு/8 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் -ஜெய்பூர்-பிகனெர் - ஜோத்பூர்-உதய்பூர் -பலசினோர்-மும்பை


மேலும் விவரங்களுக்கு http://www.maharajas-express-india.com/


செவ்வாய், 23 ஏப்ரல், 2013

சிறப்பு பள்ளி !!!!

மனவளர்ச்சி குன்றியோர் ,டவுன் சின்ட்ரோம் ,ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ,சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரி சிறப்பு பள்ளி இருக்கு.இங்க இப்போ 20 குழந்தைகள் இருக்காங்க.


இந்த குழந்தைகளுக்கு உடல் மற்றும் மூளை திறனை வளக்கறதுக்கு யோகா,ஜிம்னாஸ்டிக் ,நீச்சல் போன்ற பலவகையான பயிற்சிகள் சொல்லித்தறாங்க.

இந்த கோடை விடுமுறைக்கு அப்பறம் ஜூன் மாசம் இந்த பள்ளி திறக்கும்.இப்போ இந்த பள்ளியில் குழந்தைகள் சேக்குறதுக்கு விண்ணப்ப படிவம் குடுத்துகிட்டு இருக்காங்க.காலைல பிள்ளைங்களை கொண்டுவந்து விட்டுட்டு சாயந்திரம் கூப்பிட்டு போய்டணும்.அங்கே தங்குற வசதி இல்ல.

மேலும் விவரங்களுக்கு - 9840158373 / 04424353892

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வேர்ட் வேர்ட் டிப்ஸ்

புதியவர்களுக்கு வேர்ட்-ல் கண்ட்ரோல் கட்டளைகளின் ஷார்ட்கட்

ctrl + a - >  டாகுமென்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க
ctrl + b - > அழுத்தமான (bold ) வடிவில் எழுத்தமைக்க
ctrl + c - > தேர்ந்தெடுத்ததை , கோப்பினை நகலெடுக்க (Copy )
ctrl + d - > ஓர் எழுத்தின் (font ) வடிவை மாற்றி அமைக்க
ctrl + e - > நடுவே டெக்ஸ்ட் அமைக்க
ctrl + f - > குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தை கண்டறிந்து அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க .மீண்டும் தேடலை தொடர Alt +Ctrl +y
ctrl + g - > ஓரிடம் செல்ல
ctrl + h - > ( ஒன்றின் இடத்தில ) மற்றொன்றை அமைத்திட (Replace )
ctrl + i - > எழுத்து /சொல்லை சாய்வாக அமைக்க
ctrl + j - > பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக ,நேராக (Justify ) அமைக்க
ctrl + k - > ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த
ctrl + l - > பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க
ctrl + m - > பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட
ctrl + k - > புதிய டாகுமென்ட் உருவாக்க
ctrl + o - > டாகுமென்ட் ஒன்றை திறக்க
ctrl + p - > டாகுமென்ட் ஒன்றை அச்சடிக்க
ctrl + q - > பத்தி அமைப்பை நீக்க
ctrl + r - > பத்தியினை வலது புறம் சீராக நேராக அமைக்க
ctrl + s - > தானாக டாகுமென்ட் பதியப்பட (Auto save )
ctrl + t - > பத்தியில் இடைப்பட்ட இடத்தில இடைவெளி (hanging ) அமைக்க
ctrl + u - > டெக்ஸ்டில் அடிக்கோடிட
ctrl + v - > தேர்ந்தெடுத்ததை ஒட்டிட
ctrl + w - > டாகுமெண்டை மூடிட
ctrl + x - > தேர்ந்தெடுத்ததை அழிக்க ,நீக்கிட
ctrl + y - > இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள
ctrl + z - > இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மாறாக மேற்கொள்ள

சனி, 20 ஏப்ரல், 2013

இன்டர்நெட் - பிள்ளைகள் , பெற்றோர்கள்

பிள்ளைங்கள் இன்டர்நெட்டை சரியான முறையில் பயன்படுத்துறாங்களா??
வேகமா ஓடிகிட்டே இருக்க வேண்டிய இந்த காலத்துல ,பெற்றோர்கள் பிள்ளைங்க பக்கத்துல இருக்க முடியாம போகுது.பிள்ளைங்களும் இப்போ கணினியும் இண்டர்நெட்டும் இருந்தா போதும் பொழுது போய்டும்ங்குற நிலைமைல இருக்காங்க.

 ஆனா தங்கள் பிள்ளைங்கள் இன்டர்நெட்டை சரியான முறையில் பயன்படுத்துறாங்களாங்குற பயம் அநேக பெற்றோர்களுக்கு இருக்கும்.

வன்முறை தூண்டுற தளங்கள்,இனவேறுபாடை தூண்டும் தளங்கள்,பாலியல் தளங்கள்,போதைக்கு அடிமையாக்குற தளங்கள் ,டேட்டிங் போன்ற தேவை இல்லாத தளங்களுக்கு அவர்கள் அடிமையாகுறாங்களானு கூட தெரிஞ்சிக்க முடியாத நிலை ,அப்படியே பெற்றோர்கள் கூடவே இருந்தாலும் ஒரு கண் அசருற நேரத்துல நம்மள மீறி போகும் சில சமயம்.

பிள்ளைங்ககிட்ட செய்யாதே ,போகாதே, பக்காதேனு சொன்னா அநேக குழந்தைகள் அதை 'என்னனுதான் பாப்போமே'னு செஞ்சுதான் பாப்பாங்க.அது அவங்க தப்பில்ல.அந்த வயசுக்கே உரிய ஆர்வம்.

 இந்த மாதிரி சமயத்துல ,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைங்களை கண்கானிக்குறதுக்காகவே ஒரு ப்ரோக்ராம் இருக்கு .அதன் பேர் k 9 web protection.

 இந்த ப்ரோக்ராம் மூலமா ,பிள்ளைங்கல இணையத்துல கட்டுப்பாடோட வழிநடத்த வழிகளை செட் செஞ்சுடலாம்..பெற்றோர்கள் பக்கதுல இல்லைனாகூட இந்த செட்டிங்க்ஸ் மூலமா பிள்ளைகள் எந்த சூழ்நிலையிலும் வழிமாறி போகமா இந்த ப்ரோக்ராம் பாத்துக்கும்.

 பிள்ளைகளோட வயசுக்கு தகுந்த மாதிரி நாம செட்டிங்க்ஸ்ல தடைகளை ஏற்படுத்தலாம்.

இந்த தடைகள் செயல்படுறவகைல safe search என்ற வழியை அமைக்கலாம். 

குறுப்பிட்ட நேரத்துல இன்டர்நெட் இணைப்பு இல்லாம கூட செய்யலாம்.

நாம செட் பண்ற பாஸ்வோர்ட்டுக்கு மட்டும் இன்டர்நெட் வேலைசெய்ற மாதிரி செட் பண்ணலாம்..

இதையும் மீறி யாராவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்த்தாங்கனா எப்போ பாத்தாங்க ,எந்த நேரம் போன்ற விபரத்தை நம்ம மின் அஞ்சலுக்கு அனுப்புற மாதிரி செட் பண்ணலாம்.

இந்த ப்ரோக்ராமை http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free என்ற தளத்தில் இருந்து டவுன்லோட் செஞ்சுக்கலாம்.இதற்க்கான இலவச லைசன்ஸ் கீ இந்த தளத்துளையே கிடைக்கும்.இந்த ப்ரோக்ராம்-ஐ iphone ,ipod touch போன்றவற்றிலும் பயன் படுத்த முடியுமாம்

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இயற்கை உணவகம்

தமிழகத்தின் முதல் இயற்கை உணவகம் சிவகாசியில், மாறன்ஜி என்பவர் 6 வருஷங்களா நடத்திகிட்டு வராறாம்.

 இவர் முளைகட்டிய தானியங்கள்,கற்றாழைப் பாயசம்,நெறிஞ்சிமுள் சாறு, துளசி டீ போன்ற எண்ணற்ற மூலிகைத் தாவரங்களைக்கொண்டு 18 வித நோய்களுக்கான உணவுகளைத் தயாரிச்சு , மிகக் குறைஞ்ச விலையில் கொடுத்து வராறாம் . சிவகாசி மட்டுமில்லாம , தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் இந்த இயற்கை உணவகத்தில் சாப்ட்டுட்டு, மாறன்ஜியிடம் ஆலோசனைகளையும் கேட்டு போறாங்களாம் நிறையா பேர்.

உடம்பு இளைக்க அருகம்புல் சாறு, மலச்சிக்கல் மற்றும் மூளைச்சூட்டை தணிக்க நெருஞ்சிமுள் சாறு, முடி உதிர்தலை தவிர்க்க கறிவேப்பிலைக் கீர், சிறுநீர் கல் அடைப்பைப் போக்க வாழைத்தண்டுச் சாறு, ஞாபக சக்திக்கு வல்லாரை சூப், ஆரோக்கியத்திற்கு தினைமாவு லட்டு, நவதானிய லட்டு, முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், பிற்பகல் 3 மணிக்கு மேல் முளைகட்டிய பயறு மற்றும் சுண்டல் வகைகள், சர்க்கரை நோயைக் குறைக்க வெந்தயக்களி,நெல்லிக்காய் ரசம், மூட்டு வலிக்கு முடக்கத்தான் ரசம், ரத்தசோகைக்கு பீட்ரூட் சூப், சளி, இருமலை போக்க துளசி டீ என்று 18 வகை நோய்களுக்கான இயற்கை உணவுகளையும் சூப்களையும் இங்கு தயாரிச்சு குடுக்குறது இந்த உணவகத்தோட சிறப்பு.

மேலும் தமிழகத்திலேயே நோய்களைக் குணமாக்க ஆரம்பிக்கப்பட்ட முதல் இயற்கை உணவகம் இதுதான் என்பது சிறப்பு இன்டர்நேஷனல் நேச்சுராலாஜி அமைப்பின் (INO) மூலமாக மத்திய அரசின் சிறந்த இயற்கை உணவகம் என்ற விருதைப் வாங்கி இருக்காம் , மாறன்ஜியின் இந்தத் தாய்வழி இயற்கை உணவகம்.

 தொடர்புக்கு: மாறன்ஜி   :   93674 21787

                                 --நன்றி வாரஇதழ் 

வியாழன், 18 ஏப்ரல், 2013

கூகுளின் கண்ணாடி !




  இது என்ன கண்ணாடினு பாக்குறீங்களா? சாதாரணக் கண் கண்ணாடியைப்போலவே இருக்குற இதுல, போன் பேசலாம், வீடியோ எடுக்கலாம், போட்டோ பிடிக்கலாம், இண்டர்நெட்டில் சாட்டிங்கும் பண்ணலாம், யூ டியூபில் படம்  பாக்கலாம், கேம்ஸ் ஆடலாம்.5 MP கேமரா ,வீடியோ ரெகார்டிங்,ப்ளூடூத்,வை ஃபை,12 GB மெமரினு ஏகப்பட்ட அம்சங்கள்.  கூகிள் இந்த கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்காங்க.


 அடுத்த வருஷம் இந்த கண்ணாடி சந்தைல வந்துடும்னு  சொல்றாங்க.சில பேரை செலக்ட் பண்ணி அவங்க மூலமா இந்த கண்ணாடியல இன்னும் என்ன என்ன வசதிகள சேக்கலாம்னு டெஸ்ட் செய்துக்கிட்டும் இருக்காங்களாம்.கண்டிப்பா விலை அதிகமாகதான் இருக்கும்.

 (ம்ம்ம்ம் ..என்ன கண்ணாடிய விட பொண்ணு சூப்பரா இருக்கா ..ம்ம்ம்ம்...நீ என் இனமடா !!!! )   

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

கருவில் 0-9 மாதங்கள் நம் வளர்ச்சி

நாம கருவில் எப்படி வளருறோம்னு தெரியுமா?கருவில் உருவானது முதல் ஒன்பது மாதங்கள் எப்படி வளர்ச்சி அடைறோம்னு தெரியுமா?இந்த அமேசிங் வீடியோ பாருங்க.