பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இயற்கை உணவகம்

தமிழகத்தின் முதல் இயற்கை உணவகம் சிவகாசியில், மாறன்ஜி என்பவர் 6 வருஷங்களா நடத்திகிட்டு வராறாம்.

 இவர் முளைகட்டிய தானியங்கள்,கற்றாழைப் பாயசம்,நெறிஞ்சிமுள் சாறு, துளசி டீ போன்ற எண்ணற்ற மூலிகைத் தாவரங்களைக்கொண்டு 18 வித நோய்களுக்கான உணவுகளைத் தயாரிச்சு , மிகக் குறைஞ்ச விலையில் கொடுத்து வராறாம் . சிவகாசி மட்டுமில்லாம , தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் இந்த இயற்கை உணவகத்தில் சாப்ட்டுட்டு, மாறன்ஜியிடம் ஆலோசனைகளையும் கேட்டு போறாங்களாம் நிறையா பேர்.

உடம்பு இளைக்க அருகம்புல் சாறு, மலச்சிக்கல் மற்றும் மூளைச்சூட்டை தணிக்க நெருஞ்சிமுள் சாறு, முடி உதிர்தலை தவிர்க்க கறிவேப்பிலைக் கீர், சிறுநீர் கல் அடைப்பைப் போக்க வாழைத்தண்டுச் சாறு, ஞாபக சக்திக்கு வல்லாரை சூப், ஆரோக்கியத்திற்கு தினைமாவு லட்டு, நவதானிய லட்டு, முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், பிற்பகல் 3 மணிக்கு மேல் முளைகட்டிய பயறு மற்றும் சுண்டல் வகைகள், சர்க்கரை நோயைக் குறைக்க வெந்தயக்களி,நெல்லிக்காய் ரசம், மூட்டு வலிக்கு முடக்கத்தான் ரசம், ரத்தசோகைக்கு பீட்ரூட் சூப், சளி, இருமலை போக்க துளசி டீ என்று 18 வகை நோய்களுக்கான இயற்கை உணவுகளையும் சூப்களையும் இங்கு தயாரிச்சு குடுக்குறது இந்த உணவகத்தோட சிறப்பு.

மேலும் தமிழகத்திலேயே நோய்களைக் குணமாக்க ஆரம்பிக்கப்பட்ட முதல் இயற்கை உணவகம் இதுதான் என்பது சிறப்பு இன்டர்நேஷனல் நேச்சுராலாஜி அமைப்பின் (INO) மூலமாக மத்திய அரசின் சிறந்த இயற்கை உணவகம் என்ற விருதைப் வாங்கி இருக்காம் , மாறன்ஜியின் இந்தத் தாய்வழி இயற்கை உணவகம்.

 தொடர்புக்கு: மாறன்ஜி   :   93674 21787

                                 --நன்றி வாரஇதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக