பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஏன் அமெரிக்காவில் கார்கள் அதிகம் ?

அமெரிக்கால நீங்க பைக் விட கார்களைத்தான் அதிகமா பாத்து இருப்பீங்க.அது ஏன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா?நான் யோசிச்சு இருக்கேன்.அதுல கிடைச்ச விடைதான் இது


இந்த வீடியோவை பாக்க  இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க
         
                            ↓

ஏன் அமெரிக்காவில் கார்கள் அதிகம் ?


சனி, 25 ஜனவரி, 2020

Azafran Organics Product Review

Azafran Organics Product சில மாசம் நான் use பண்ணினேன்.அதனுடைய review என்னுடைய Youtube Channel -ல் share செஞ்சுருக்கேன் .பாருங்க .

இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க
         ↓
Azafran Organics Product Review



வியாழன், 23 ஜனவரி, 2020

என்னோட புது Entry

நான் U&ME -என்னும் youtube channel  ஆரம்பிச்சிருக்கேன்.இப்போ நாங்க அமெரிக்காவில் வசிக்கறதால இங்க என்ன என்ன பிடிச்சிருக்கு,என்ன என்ன அனுபவங்கள் புதுமையா இருக்குனு இந்த சேனல்ல ஷேர் பண்ணன் போறேன் .அதுமட்டும் இல்லாம  இந்த சேனல்ல என்னோட travel அனுபவங்கள் பத்தி, சில beauty product பத்தியும் ஷேர் பண்ணப்போறேன். so, பாருங்க support பண்ணுங்க.


என்னுடைய youtube சேனல் லிங்க்
   
          ↓
       
Introduction


செவ்வாய், 14 ஜனவரி, 2020

இங்க ஏன் இவ்ளோ car-கள் இருக்கு ??


             இப்போ நாங்க அமெரிக்கால வாசிச்சுக்கிட்டு இருக்கோம்.இந்த  நாட்ல நம்மோட லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கு, என்ன என்ன விஷயங்கள் comfortable -ஆ இருக்கு ,என்ன என்ன விஷயங்கள் comfortable-ஆ இல்ல .என்ன என்ன விஷயங்களை பாத்து ஆச்சர்யப்படுறோம்னுலாம் சொல்லப்போறேன்.so கண்டிப்பா இந்த விஷயங்கள் உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.

இங்க இருக்குற ஒரு ஒரு வீடும் ரொம்ப அழகா இருக்கும்.ஒரு ஒரு வீட்டுக்கும் குறைஞ்சது ரெண்டு கார் இருக்கும்.புருஷனுக்கு ஒரு கார் ,பொண்டாட்டிக்கு ஒரு கார்னு .குறைஞ்சது ரெண்டுனு தான் சொல்றேன்.அதிகமா எத்தனை கார்  வேணும்னாலும் அவங்க உபயோகிக்கலாம்.ஆனா பைக் அதிகமா இருக்காது.ஒரு 50 வீட்டுக்கு ஒரு பைக்-னு தான் ratio இருக்கும்.

இன்னைக்கு நாம பாக்க போறது ஏன் இங்க பைக் அதிகமா இல்ல ?!ஏன் இவங்க பைக் அதிகமா உபயோகிக்க மாட்டேங்குறாங்கனு .

இதுக்கு ரெண்டு காரணம் இருக்கு.ஒன்னு பைக்குக்கான இன்சூரன்ஸ் பணம் இங்க அதிகம். ஆமா நாம அதிகமான பணம் கட்டணும்.

ரெண்டு இங்க இருக்குறseasons . பொதுவா இங்க நாலு season இருக்கு .
= > வசந்தகாலம் (Spring )
= > கோடைக்காலம் (Summer)
= > இலையுதிர்காலம் (Fall )
= > குளிர்காலம் (Winter)

பொதுவா வசந்த காலம் - > மார்ச் தொடங்கி மே வரைக்கும் இருக்கும்.
கோடைக்காலம் - > ஜூன் தொடங்கி ஆகஸ்ட் வரைக்கும் இருக்கும் .
இலையுதிர்காலம்  - > செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரைக்கும் இருக்கும்.
குளிர்காலம்  - > டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரைக்கும் இருக்கும்.

இந்த நாட்டுல மழைக்காலம்னு தனியா இல்ல.வருஷத்துல எப்போ வேணும்னாலும் மழை பெய்யும்.நான் இங்க அதிகமா மழை பாத்தது நவம்பர்,, டிசம்பர், ஜனவரி சமயங்கள்ல .

so, இந்த மாதிரி சீசன் காரணமா குளிர்ல ,மழை-லாம் பைக் ஓட்டிக்கிட்டு போக முடியாதுங்குறதாலும் ,கார் இன்சூரன்ஸ் விட பைக் இன்சூரன்ஸ் அதிகமா இருக்குற காரணத்தாலும் தான் இங்க பைக் அவ்ளவா உபயோகிக்க மாட்டேங்குறாங்க.











செவ்வாய், 31 டிசம்பர், 2019

Be yourself !! Be bold beauty !!

ஒரு வேண்டுதலுக்காக என் முடியை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தேன்.அப்போ என் மூணு வயசு பொண்ணு என்ன பாத்து ரொம்ப அழுதா. அம்மா ஹேர்ஸ்டைல் எனக்கு பிடிக்கல னு தேம்பி தேம்பி அழுதா.சீக்கிரம் வளந்துடும்மா கவலைப்படாதனு ஆறுதல் சொன்னேன்.

நான் படிச்சிருக்கேன் கேன்சரால பாதிக்கப் பட்டவங்க கீமோதெரபி பண்ணும்போது தலை முடி கொட்டிடும். அவங்க தன்னோட மொட்டை தலையை நினச்சு ரொம்ப வருத்தப்படுவாங்க கூச்சப்படுவாங்க அதனால அவங்களுக்கு wig செஞ்சுத்தருவாங்க .அதனாலயே wig -க்கு மவுசு அதிகம்.அதுவும் இந்தியன் முடினா ரொம்பவே அதிகம்னு.

ஆனா நா எப்பவுமே யோசிப்பேன், எனக்கு ஆச்சர்யமா கூட இருக்கும் ,எவ்ளோ பெரிய மோசமான நிலைமைல இருந்து அவங்க மீண்டுவராங்க.எவ்ளோ வலியை கடந்துவராங்க.சாவை ஜெயிச்சு வராங்க. அவங்க மத்தவங்களுக்கு inspiration-ஆ இருக்காங்க.எடுத்துக்காட்டா  இருக்காங்க.ஆனா அதுலாம் விட மறுபடியும் வளரப்போற முடிக்காக வருத்தப்படுறாங்களே !!-னு .

இவங்களுக்காகவே இந்த மொட்டை தலையோட நான்  போட்டோஷூட் எடுக்கணும்னு நினச்சேன் .இது வெறும் முடித்தான் உள் அழகும் வெளி அழகும் இந்த முடியினால மறைஞ்சிடாது .எந்த நிலைமையிலும் தன்னம்பிக்கை மட்டும் போகக்கூடாதுனு நினச்சு எடுத்ததுதான் இந்த போட்டோஸ் எல்லாம்.

இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணனும்னு நினச்சேன்.பண்றேன்.


செவ்வாய், 26 நவம்பர், 2019

புதிய தளம் ! புதிய அனுபவம் !!

எல்லோருக்கும் வணக்கம் .

         என்னுடைய அண்னன் குடும்பம் சமீபத்தில் அமெரிக்காவில் குடியேறினர் . அமெரிக்காவின் வாழும் அவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் அந்த நாட்டின் பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் பற்றி என்னுடைய அண்ணி திருமதி கார்த்திகா ராம்குமார் அவர்கள் https://karthikaspeaks.wordpress.com/  என்னும் தளத்தில் மிகவும் அழகாக நேர்த்தியாக எழுதிவருகிறார்.

படித்து பகிருங்கள் என அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

https://karthikaspeaks.wordpress.com/2019/11/20/31/

சனி, 6 அக்டோபர், 2018

எத்னைபேருக்கு இதன் அர்த்தம்தெரியும் !!

How many of us know the meaning of "Mangalyam thantunanena... "

Here it is ,

The true meaning of Sanskrit Mantara "Mangalyam tantunanena mama jeevana hetuna kanthe badhnami subhage twam jeeva sarada satam"

Meaning :

Mangalyam thanthuna anena--This mangal sutra (This sacred thread)(thantu–thread)
hetuna–is essential (hetu-reason,purpose)
mama-my, jeevana–life(long life)(for my long life)
Kante-around your neck( in, on etc prepositions are signified by the ‘e’ ending)
badhnami—I am tying
Subhage–oh,maiden of many auspicious attributes
twam–you(may you)
jeeva-–live
sarada–years( from Sarad ritu)
satam–hundred

“O my bride, the source of all my spiritual riches, I tie this auspicious thread around your neck, which shall be the foundation of my life (hence forth). I bless that you may live for hundred years. (And by this, I am blessed too as I pledge to be your partner in life)”

மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே
சஞ்சீவ சரதா சதம்

அர்த்தம்:

 “மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!”