பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 31 டிசம்பர், 2019

Be yourself !! Be bold beauty !!

ஒரு வேண்டுதலுக்காக என் முடியை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தேன்.அப்போ என் மூணு வயசு பொண்ணு என்ன பாத்து ரொம்ப அழுதா. அம்மா ஹேர்ஸ்டைல் எனக்கு பிடிக்கல னு தேம்பி தேம்பி அழுதா.சீக்கிரம் வளந்துடும்மா கவலைப்படாதனு ஆறுதல் சொன்னேன்.

நான் படிச்சிருக்கேன் கேன்சரால பாதிக்கப் பட்டவங்க கீமோதெரபி பண்ணும்போது தலை முடி கொட்டிடும். அவங்க தன்னோட மொட்டை தலையை நினச்சு ரொம்ப வருத்தப்படுவாங்க கூச்சப்படுவாங்க அதனால அவங்களுக்கு wig செஞ்சுத்தருவாங்க .அதனாலயே wig -க்கு மவுசு அதிகம்.அதுவும் இந்தியன் முடினா ரொம்பவே அதிகம்னு.

ஆனா நா எப்பவுமே யோசிப்பேன், எனக்கு ஆச்சர்யமா கூட இருக்கும் ,எவ்ளோ பெரிய மோசமான நிலைமைல இருந்து அவங்க மீண்டுவராங்க.எவ்ளோ வலியை கடந்துவராங்க.சாவை ஜெயிச்சு வராங்க. அவங்க மத்தவங்களுக்கு inspiration-ஆ இருக்காங்க.எடுத்துக்காட்டா  இருக்காங்க.ஆனா அதுலாம் விட மறுபடியும் வளரப்போற முடிக்காக வருத்தப்படுறாங்களே !!-னு .

இவங்களுக்காகவே இந்த மொட்டை தலையோட நான்  போட்டோஷூட் எடுக்கணும்னு நினச்சேன் .இது வெறும் முடித்தான் உள் அழகும் வெளி அழகும் இந்த முடியினால மறைஞ்சிடாது .எந்த நிலைமையிலும் தன்னம்பிக்கை மட்டும் போகக்கூடாதுனு நினச்சு எடுத்ததுதான் இந்த போட்டோஸ் எல்லாம்.

இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணனும்னு நினச்சேன்.பண்றேன்.


3 கருத்துகள்:

  1. உங்களின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் &
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு