பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - ஓ மனமே - உள்ளம் கேட்குமே

படம் :உள்ளம் கேட்குமே 
பாடல் : ஓ  மனமே
பாடியவர் : ஹரிஹரன் 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 
பாடலாசிரியர் : வைரமுத்து ஓ  மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங் கற்களை எரிந்தது யார்

ஓ  மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கால் தோரும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா
தோல்விகள் இன்றி பூரணமா

ஓ  மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி

ஓ  மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக