பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 30 செப்டம்பர், 2015

கருவிகளும் பயன்களும்!

கப்பல் செல்லும் திசையை அறிய – மரைனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass)

கடலின் ஆழத்தை அளக்க -ஃபாதம்மீட்டர் (Fathommeter)

விமானம் பறக்கும் உயரத்தை அறிய – ஆல்டிமீட்டர் (Altimeter)

மேகங்களின் திசை, உயரம் அறிய – நீபோஸ்கோப் (Nephoscope)

காற்றின் வேகம், திசை அறிய – அனிமோமீட்டர் (Anemometer)

காற்றின் ஈரப்பதத்தை அறிய – ஹைக்ரோமீட்டர் (Hygrometer)

சனி, 19 செப்டம்பர், 2015

பாடலின் வரிகள் - கண்ணால கண்ணால - தனிஒருவன்

படம் :தனிஒருவன் 
பாடல் : கண்ணால  கண்ணால
பாடியவர்கள் : கௌசிக் ,பத்மலதா 
பாடலாசிரியர் :ஹிப் ஹாப் தமிழா  
இசை: ஹிப் ஹாப் தமிழா  



நெஞ்சோரமா..ஒரு கதல் துளிரும்போது..
கண்ணோரமா..சிறுகண்ணீர் துளிகள் யேனோ!!
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நெனைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே!!

மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

புதன், 16 செப்டம்பர், 2015

கடல் ஆமை சிற்பங்கள்

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

 பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான்.

 இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது. அந்த செல்வம் வரலாற்று காலம் நெடுகவும் ராஜஸ்தான் ஏராளமான படையெடுப்புகளுக்கு ஆளாகவும் காரணமாக அமைந்திருக்கிறது. வீரம் பொருந்திய ரஜபுத்திர வீரர்களாலும், மார்வார் வீரர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட ராஜஸ்தானில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் கொண்டும் போரில் எதிரிகளின் கைகளில் சிக்கி மானமிழக்க கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருந்திருக்கின்றனர். இதுவே 24,000 பெண்கள் ஒரே இடத்தில் தீக்குளித்து உயிர்விடுவதற்கும் காரணமாகிப்போனது. அந்த கொடூர சம்பவம் நிகழ்த்த இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் .


ஜைசால்மர் கோட்டை : ராஜபுத்திர அரசர் ராவல் ஜைசால் என்பவரால் 1156ஆம் ஆண்டு இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. ஜைசால் மன்னரின் பெயராலேயே இது ஜைசால்மர் கோட்டை என்றுஅழைக்கப்படுகிறது. பெரும் படையெடுப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மூன்றடுக்கு சுவர்களால் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

சனி, 22 ஆகஸ்ட், 2015

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்..!

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்:


வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும். கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும். (கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும் சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.

பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

யாராலும் மறுக்க முடியாத உண்மை:

அன்றாடம் நம் கைகளிலும், சட்டைப் பாக்கெட்டிலும், சில சமயங்கள் நம் வாயிலும் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் "நோய் பரப்பும் காரணிகள்".

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்? அப்படியாக பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.
"காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1, TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள். பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.
அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள். ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

Cache Memory என்றால் என்ன?

கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.
(Cache எனும் இந்த ஆங்கில வார்த்தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்)ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களைசேமிப்பதற்காகவே சிபியூ இந்த கேஷ் மெமரியைப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின்வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.

கணினியில் கேஷ் மெமரி பயன்படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் டேட்டாவைக் கடத்துவதற்கென அமைக்கப் பட்டிருக்கும் மதர்போர்டிலுள்ளசிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதைகளை சீபீயூ பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற்திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து சீபீயூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடுகிறது.