பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 9 ஜனவரி, 2014

இந்த பெயர் எல்லாம் எப்படி வந்தது தெரியுமா?

நமக்கு ரொம்ப பரிச்சயமான ,பிரபலமான ஆப்பிள்,கூகிள்,ஹாட் மெயில் ,மைக்ரோசாஃப்ட் ,மோட்டோரோலா ,இன்டெல்,சோனி இந்த நிறுவனங்களுக்கு எப்படி இந்த பெயர் வந்ததுன்னு தெரியுமா?


ஆப்பிள்

இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் .இவருக்கு ரொம்ப பிடிச்ச பழம் ஆப்பிள்.இவரோட ஊழியர்கள் கிட்ட நீங்க இத விட நல்ல பேர் சொல்லலைனா இதையே கம்பெனிக்கு பெயரா வச்சுடுவேன்னு சொல்லிருக்கார்.அவர் சொன்னது போலவே இதே பெயர் கம்பெனிக்கு நிலைச்சிடுச்சு.

கூகிள் 

இந்த நிறுவனத்தை துவங்கிய செர்கீபிரின் மற்றும் லாரிபேஜ்  கூகால் (Googol )-னு தான்பெயர் வச்சாங்க.கூகால் அப்படீன்னா ஒன்றுக்கு பின் நூறுசைபர் போட்டா எந்த எண் வருமோ அதுதான்.இவங்க தங்களோட ப்ராஜெக்டை ஒரு angel inrestor கிட்ட சமர்பிச்சிருக்காங்க .அவங்க இவங்களுக்கு அனுப்பின காசோலைல கூகிள் (Google )-னு எழுதி அனுப்பிட்டாங்க.அப்போதிலருந்து கூகிள்னு பெயர் மாறி பிரபலம் ஆகிடுச்சு.

ஹாட் மெயில் 

இதை தோற்றுவித்தவர் ஜாக் ஸ்மித் .சபீர் பாடியா என்பவர் தன்னோட பிசினஸ் பிளான்க்கு அதாவது மயில் சர்வீஸ்க்கு பெயர் தேடிக்கிட்டு இருந்துருக்கார்.அந்த பெயர் மெயில்னு முடியனும்னு விருப்பபட்டுருக்கார்.அப்போ அவர் தேர்ந்தெடுத்த பெயர் தான் ஹாட் மெயில் .இந்த பெயர்ல HTML என்ற எழுத்துக்கள் ஆரம்பத்துல பெரிய எழுத்துக்களா அதாவது Capital Letters -ஆக எழுதப்பட்டதாம்.HoTMaiL .

இன்டெல் 

இதை தோற்றுவித்தவர்கள் பாப் நாய்ஸ் ,கார்டன் மூர் .இவங்களுக்கு தங்களோட நிறுவனத்தோட பெயர் மூர் நாய்ஸ் (moore noyce)-னு இருக்கணும்னு ஆசைப்பட்டுருக்காங்க.ஆனா இந்த பெயர் ஒரு ஹோட்டல் செயின் ம் மூலம் Trade Mark செய்யப்பட்டதால வேற பெயர் வைக்க வேண்டியதா போய்டுச்சு.Integrated Electronics என்ற பெயரை சுருக்கி 'Intel' -னு வச்சுட்டாங்க.

மைக்ரோசாஃப்ட் 

இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர் பில்கேட்ஸ் .இந்த நிறுவனம் மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்கான சாப்ட்வேர் தயாரிக்குறதால இந்த பெயர் வந்தது.முதல்ல Micro-soft -னு தான் இருந்தது அப்பறம் தான் Microsoft ஆனது.

மோட்டோரோலா 

இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர் பால்கால்வின் . இந்த நிறுவனம் முதல்ல கார்களுக்கு தேவைப்படும் ரேடியோக்களை தயாரிக்குறதுல இருந்தது அப்பறம் தான் செல்போன் தயாரிக்க ஆரம்பிச்சது.

சோனி 

இது இலத்தீன் மொழியில இருந்து எடுக்கப்பட்டது.சோனஸ் (sonus) அப்படீனா ஓசை(sound) என்பது அர்த்தம்.சோன்னி (Sonny) என்பது அமெரிக்கர்கள் பயன்படுத்துற ஒரு ஸ்லாங் (Slang).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக