பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 11 ஏப்ரல், 2013

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா - 1


நீயா நானா எனக்கு பிடிச்ச ப்ரோக்ராமில் ஒன்னு.கோபிநாத்தும் ,அவரோட திறமையான பேச்சும் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் .
ஒரு ஒருத்தங்ககிட்டயும் பேசி அவங்க மனசுல நினைக்குறதை அப்படியே வெளில பேசவைக்குற திறமை கோபிநாத் சார்க்கு நிறைய இருக்கு.எப்படியும் போட்டு வாங்கி மேட்டர்-ஐ வாங்கிடுவார் .

போன வாரம் நீயா நானாவின் தலைப்பு 'ஆணுக்குள் இருக்கும் பெண்மை ,பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை ' .பெண்கள் எப்போல்லாம் கோவப்படுறாங்க ஆண்கள் எப்போ எல்லாம் கோவப்படுறாங்க?.ஆண்களின் பயம் என்ன?எப்போ எல்லாம் அழறாங்க?ஆண்கள் எப்போ எல்லாம் வெட்கப்படுகிறார்கள்னு நிறையா விஷயங்கள் விவாதிச்சாங்க .
சினிமாவில் ஒரு சாதாரண ஹீரோ கூட 50 பேரை அடிக்குற மாதிரி அதுவும் எப்படி இவரு பறந்து பறந்து அடிக்குறது அவங்க சுழண்டு சுழண்டு விழறதுனு  காட்றாங்க.ஆனா இந்த ஷோ -வில் கலந்துகிட ஆண்களில் 99% பேர் அடிதடி சண்டை -னா பயம்னு  தான் சொன்னாங்க.

ரொம்ப சுவாரசியமா இருந்த அந்த தலைப்பின் கீழ் நடந்த விவாதத்தில் 
கொஞ்சம் ஜாலியாவும் கொஞ்சம் சீரியஸாவும் இருந்த சில 'ஹை லைட்ஸ் ' இங்க..

 * கோவம் வந்தா நானும் பேசுவேன் அவங்களும் பேசுவாங்க ரெண்டுபேரும் பேசுவோம் ,சில சமயம் சமாதானம் ஆகிடுவோம்னு சொல்ல , கோபிநாத் கைதட்டி சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியாம குதிச்சு சிரிச்சார் , அதாவது கோபி சொன்னது அந்த பங்கேற்பாளர் சொன்னதை விட தமாஷா இருந்தது ,என்னனா ,"சூப்பர் சார் ,அவரும் பேசுவாரு நீங்களும் பேசுவீங்க பேசிகிட்டே இருப்பீங்க கடைசியா டயர்ட் ஆகி ரெண்டுபேரும் டீ குடிச்சுட்டு போய்டுவீங்களா"னு கேக்க அரங்கமே சிரிப்பலைல இருந்தது.

* அதே போல இன்னோர்த்தர் சொன்னார் , நானும் சண்டைக்கு பல்க்-கா ஆள் கூப்பிட்டு போவேன் அவங்களுக்கும் உள்ளுக்குள்ள பயம் இருக்கும் ஆனாலும் சமாலிச்சுப்போம் சொல்ல மறுபடியும் சிரிப்பலை.

* "நைட் 9 மணிக்குமேல வெளில போகமாட்டேன் நான்.அப்படி போயி ஆகனும்னா வீட்ல யாரையாவது வாசல்ல வெயிட் பண்ண சொல்வேன் நான் திரும்ப வர வரைக்கும்"னு  ஒருத்தர் சொன்னதை கேட்க ஆச்சர்யமா இருந்தது. (இப்படியும் இருக்காங்களா ?)

* ஒருத்தர் தான் வேலைக்காக 50 ஆயிரம் ஒருத்தர்கிட்ட குடுத்து அவர் ஏமாத்திட்டார் .என்ன பண்றதுன்னு தெரியாம தற்கொலை முயற்சி பண்ணினேன்.ஏதோ அதிஷ்டம் பொ ழச்சுட்டேன் ,ஆனா அந்தாளு கண்ல மறுபடியும் பட்டா சும்மா விடமாட்டோம் அவர்கிட்ட ஏமாந்த 121 பேர் இருக்கோம்னு சொன்னப்போ ரொம்ப வருத்தமா இருந்தது.

பெண்கள்கிட்ட, உங்களுக்கு எவ்ளோ கோவம் வரும்னு கேட்டப்போ ,ஒரு பெண் எங்க பில்டிங் முழுக்க கேக்குற மாதிரி கத்துவேன்னு சொல்ல,இன்னோர் பெண் கைல கிடைக்குறது எல்லாம் பறக்கும்னு சொல்ல  ,இன்னோர் பெண் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுவேன்னு சொல்ல ,ஒருத்தர் சட்டை பட்டன் போடலைனா சாத்திடுவேன் சாத்தி ,யாருன்னு பாக்கமாட்டேனு அழகான ஸ்லாங்கில் சொன்னாங்க.

* சிறப்பு அழைப்பாளர்களில் திருநங்கை சுதாவும் ஒருவர்.அவ்வளவு அழகா தெளிவா அவங்க பேசினதை ரசிக்க முடிஞ்சது..பஸ்ல நைட் ட்ராவல் பண்ணினப்போ பக்கத்துல ஒரு பொண்ணு பயணம் பண்ணினா ,அவளுக்கு பொழுது போகல என்னபத்தி விசாரிச்சுகிட்டே வந்தா ,நான் திருனங்கைனு சொன்னா அவ அந்த நேரத்துக்கு வேற சீட் தேடி போய் இருக்கலாம் ,அதனால நா சொல்லல .உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சானு கேட்டா ,ஆகிடுச்சுனு சொல்லிட்டேன் ,எத்தன குழந்தைங்க என்ன பண்றாங்கன்னு கேட்டா எனக்கு கோவம் வந்துடுச்சு எப்படியாவது அவகிட்ட பேசுறதை கட் பண்ணனும்னு ரெண்டு கொழந்தைங்க ,செத்துட்டாங்கனு சொல்லி பெட் ஷீட் எடுத்து போத்திகிட்டு என்னால சிரிப்பை அடக்க முடியலை சிரிச்சிட்டேன் ,அவ ஆன்ட்டி அழாதீங்கனு சொல்ல ஆரம்பிச்சுட்டா-னு சொன்னாங்க.

* 'ஒரு நாள் ஆட்டோவில் நானும் இன்னோர் திருநங்கையும் போய்ட்டு இருந்தோம் ,நாங்க பேசுறத வச்சு அவர் கண்டுபிடிச்சுட்டார் .அப்படியே பேசி ரூட் விட்டு பாத்தார் ,நாங்க எவ்ளவோ சமாளிச்சோம் ஒரு கட்டத்துல முடியாம எங்க ஆண் குரல்ல பேசினோம் அவ்ளோதான் அந்தாளுக்கு 'மூட்' போய்டுச்சு'னு, அவங்க கஷ்டத்தை கூட சிரிசுகிட்டே சொன்னாங்க.

* "ஒரு நாள் ரொம்ப வயிர் வலினு டாக்டர் கிட்ட போனேன் .அவர் என்ன திருனங்கைனு கண்டுபிடிக்கல.அவரும் ஜெல் போட்டு என்னனவோ டெஸ்ட் பண்ணி பாத்தார் வயித்துல. அவரால என்ன எனக்கு பிரச்சனைன்னு கண்டுபிடிக்க முடியல.கடைசியா ரிப்போர்ட் குடுத்தார் அதுல ,இது நார்மல் அது நார்மல் அப்படி இப்படினு இருந்தது கடைசியா யுட்ரஸ் 
நார்மல்னு எழுதி கையெழுத்து போட்ருந்தார் .எனக்கு பாத்ததும் சிரிப்பு வந்துடுச்சு.எதுக்கு நான் டாக்டர் கிட்ட போனேனோ அது சரியாகலை"ன்னு சொன்னாங்க.

   எவ்ளோ வலி வேதனைகளை தினம் தினம் தாங்குறாங்க இவங்க எல்லாம்.ஆனா தன் கஷ்டத்தை கூட மத்தவங்க ரசிக்குற மாதிரி சொல்றாங்க.என் குடும்பத்துக்கு நான் பையனா செய்ய வேண்டிய கடமைகளையும்  செய்யணும்.சில சமயம் ஆணாகவும் இருக்க வேண்டியது இருக்கு சில சமயம் பெண்ணாகவும் இருக்கவேண்டியது இருக்குனு அவங்க சொன்னப்போ நிஜமாவே கஷ்டமா இருந்தது.
      
    பெண்களை விட ஆண்கள் தான் தங்களை அதிகமா ஆதரிக்குறாங்க  எங்க மேல ஒரு கனிவோட இருக்காங்க .ஆண்களுக்கு நன்றி எல்லார் சார்பாவும் சொல்றேன்னு சொன்னாங்க. பெண்கள் தான் இன்னும் எங்கள முழுசா புரிஞ்சுக்கல ஏத்துக்கல-னும் சொன்னாங்க .

 சில ஆண்கள் தவறா  நடக்குறதால எல்லாரையும் தப்புன்னு சொல்லிடமுடியாது.சில  திருநங்கைகள் தவறா நடந்துக்குறதால எல்லாரையும் தப்புன்னு சொல்லிட முடியாது .ஹார்மோன் பிரச்சனைக்கு அவங்க என்ன செய்ய முடியும் .நம்மால முடிஞ்சவரை சப்போர்ட்-ஆக இருக்க நினைப்போம்.







முழு எபிசோடையும் இந்த http://www.youtube.com/watch?annotation_id=annotation_490944&feature=iv&src_vid=8_EDAw8wjuw&v=ErlnrSxi9Hg இல் பார்க்கலாம் 


இந்த தலைப்பு ,விவாதங்களை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?...விவாதிப்போம்

2 கருத்துகள்: