பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

ஏரி மறுசீரமைப்பு வேலையை செய்யும் அருண்

கூகிள் நிறுவனத்துல செஞ்ச வேலையை விட்டுட்டு,25 வயதான அருண்  கிருஷ்ணமூர்த்தி ,சுற்று சூழலை பாதுகாக்க ஏரிகளை சுத்தம் செஞ்சுகிட்டு வராறாம்.இதுவரை தமிழ்நாடு,ஆந்திரா,டெல்லி என இந்தியா முழுக்க 12 ஏரிகளை மறு சீரமைப்பு செஞ்சு இருக்காராம்.இதுக்காக யாரோட உதவியும் எதிர்பாக்கலையாம்,யார்கிட இருந்தும் நன்கொடை வாங்கலையாம் ,பள்ளி மாணவர்களை ஒன்று திரட்டி தன சொந்த முயற்சியால இத செஞ்சுகிட்டு வராறாம் அருண் .இவரோட முயற்சியை பாராட்டி ஸ்விச்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனம் ஒரு விருதையும்,இளைஞர் சங்கமும் விருது   குடுத்து கவுரவிச்சு  இருக்காங்கானா பாத்துகோங்களேன்.இதுவரை 900 மாணவர்கள் அருணோட சேர்ந்து இந்த ஏரி மறுசீரமைப்பு வேலையை செஞ்சுகிட்டு இருக்காங்களாம்.


இந்த மாணவர்கள் மூலமா தெருக்கூத்து நடத்தி மக்களுக்கு ஏரிகளை பத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துறது,பேர்ட் (Bird) வாட்சிங் மூலமா பறவையை அறிதல்,இயற்கையை படம் பிடிக்குறதுன்னு எல்லா வேலையும் செய்ராங்கலாம் இந்த அமைப்பு.இவர் ரெண்டு டாக்குமெண்டரி படமும் எடுத்து இருக்காறாம்.அது சர்வதேசப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு பல விருதையும் வாங்கி இருக்காம்.
2011-ல் என்விரான்மெண்ட் பவுண்டேஷன் ஆப் இந்தியா (EFI) அப்படீங்குற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தனியா ஆரம்பிச்சு இருக்காறாம்.

6 கருத்துகள்:

 1. I want to meet Mr.Arun krishnamoorthi. Please give me him contact address or Mobile number.Am Arun kumar proprietor of;
  ARUN EXPORTS
  8220081531

  பதிலளிநீக்கு
 2. i red about him in a magazine.i dont know anything else.search in google.if u get details let me know.

  thanks

  பதிலளிநீக்கு
 3. நேற்று நான் தங்களிடம் கேட்ட கேள்விக்கு எப்போது பதில் தருவீர்கள் ?என் மின்னஞ்சல் முகவரிக்கு mssselvam65@gmail .com அனுப்பவும் .நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேளுங்க சார்-னு நேத்தே அனுப்பினேனே.நீங்க ப்லாக் -லையே கேக்கலாம்

   நீக்கு