பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 24 ஏப்ரல், 2017

தூங்கா நகரம்

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? "The World's only living civilization" உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன.

மிகப் பழமையான கிரேக்க,ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.


ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் "மதுரை "தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ். மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

படித்ததில் பிடித்தது

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது அங்கு சாதாரணமாக  தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார்.அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ-ரூமை  பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.


அப்பொழுது ஷோ-ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல் ஒரு ஏழை இந்திய குடிமகன் என நினைத்து  அடித்து விரட்டினர் இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார்.பிறகு சில மணி நேரம் கழித்து தனது முழு  அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் . ஷோ-ரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர்.ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

102 வருட பனை மரம்

பனை மரமும் தென்னை மரமும் தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்கும்.. இதோடு இதன் வாழ்வு முடிந்துவிடும் .. இதை காண்பது அபூர்வம்..


திங்கள், 30 ஜனவரி, 2017

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்...!!


1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுபஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.

9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

நம்ம தோனி !!


கூல் கேப்டன் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக்கிட்டாருனு படிச்சதும் எனக்கு அவரோட 2011 உலகக்கோப்பை போட்டி தான் நியாபகத்துக்கு வந்தது..கிரிக்கெட் பத்தி எனக்கு ரொம்ப தெரியாது.ஆனாலும் பேசிக் தெரியும் அதனால பாப்பேன்..2011 உலகக்கோப்பை முழுசா பாத்தேன்.தோனியை பத்தி நிறையா படிச்சிருக்கேன்.ஆனா அந்த மனுஷன் உசிரைக்கொடுத்து உழச்சதை அந்த மேட்ச் அப்போதான் பாத்தேன்..



2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான  கடைசி போட்டி.

நான் ,அண்ணா, அம்மா ஆர்வமா பாக்க உக்காந்தோம்..இந்தியா பேட்டிங் பண்ணினப்போ ஆரம்பத்துல பொறுமையை சோதிக்குற அளவுக்கு இருந்தது , எப்போ சச்சின் அவுட் ஆனாரோ என் அண்ணனுக்கு நம்பிக்கை போய்டுச்சு..அட போங்கையா ... இனி இந்தியா ஜெயிக்காதுன்னு முடிவு பண்ணி தூங்க ஆரம்பிச்சுட்டாங்க..

ஆனாலும் நான் விடாம பாத்துக்கிட்டு இருந்தேன் .என்னால வேற வழியே இல்லாம என் அம்மாவும்  பாத்தாங்க ..

வியாழன், 29 டிசம்பர், 2016

அர்ஜுனனும் ஆணவமும் !!



பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்.

தேரை விட்டு இறங்கு! என்றார்.

மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய்.இது என்ன நியாயம்?

அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ""தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்.

வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.

அப்போது அவர், தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்! என்றார் அதட்டலுடன்!

அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.

ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.

வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார்.

அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.

பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்! என்றார் புன்முறுவலுடன்.

'தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர்.அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான்.அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது.தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது.ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே என்று அறிவுரை கூறினார்.

தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மிதக்கும் பாலம்


சீனாவில் ஒரு வித்தியாசமான பாலத்தை தண்ணீரின் மீது கட்டியிருக்கிறார்கள். முழுக்க மரத்தினால் கட்டப்பட்ட இந்த மிதக்கும் பாலம், மத்திய சீனா ஹூபாய் மாகாணத்தில் ஓடும் ஒரு நதியின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைப் பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்தவாறே இயற்கையை ரசிக்கலாம்.