பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

2. Fried இட்லி



என்ன என்ன பொருட்கள் தேவை?

1. இட்லி
2. கடுகு
3. சீரகம்
4. உப்பு
5. கருவேப்பிலை
6. சாம்பார் பொடி
7. மிளகாய்ப்பொடி

எப்படி செய்யணும் ?

இட்லியை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி வச்சுக்கணும்..வாணல்ல எண்ணெய் ஊத்தி எண்ணை காஞ்சதும் கடுகு , சீரகம்,  கருவேப்பிலை  போட்டு தாளிக்கணும்.அடுத்து அதுல வெட்டி வச்ச இட்லியை போட்டு fry பண்ணனும்.அடுத்து அதுல தேவையான அளவு உப்பு , கொஞ்சம் சாம்பார் பொடி  , கொஞ்சம் மிளகாய் பொடி போட்டு நல்லா mix பண்ணனும்.இத அப்டியே  2 நிமிஷம்  வேகவைச்சு எடுத்து சூடா பரிமாறனும்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

1. பச்சை பட்டாணி தேங்காய் மசாலா




என்ன என்ன பொருள் வேணும் ?

1. எண்ணெய்
2. கடுகு
3. உளுந்து
4. இஞ்சி பூண்டு விழுது / இஞ்சி பூண்டு நசுக்கியது
5. தேங்காய்
6. பச்சை மிளகாய்
7. உப்பு

எப்படி செய்றது ?

பச்சை பட்டாணியை 3 மணிநேரம் நல்லா ஊறவச்சு , உப்பு சேர்த்து குக்கர்ல 3 அ 4 விசில் விட்டு வேகவைச்சு எடுத்துக்கணும்.

தேங்காய்,பச்சை மிளகாயை மிக்ஸியில போட்டு நல்லா விழுதாக்கிக்கணும்.

வாணல்ல கொஞ்சம் என்னை ஊத்தி ,எண்ணெய் காஞ்சதும் கடுகு ,உளுந்து போட்டு தாளிக்கணும்.அடுத்து அதுல இஞ்சி பூண்டு விழுது/நசுக்கியது போட்டு வதக்கனும்.  அரைச்ச தேங்காய்,பச்சை மிளகாய் விழுதை அதுல சேத்து நல்லா பச்சை வாசனை போகுறவரைக்கும் வதக்கனும்.
அடுத்து அதுல வேகவச்ச பச்சை பட்டாணியை சேத்து அந்த மசாலாக்கள் பட்டாணியில் நல்லா ஒண்ணா கலக்கவைக்கணும். ..கடைசியா கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி சூடா பரிமாறுங்க  ..

சத்தான ருசியான ரொம்ப சீக்கிரம் செய்யக்கூடிய ஒரு ரெசிபி மட்டும் இல்ல இது உங்களுக்கு பாராட்டையும் வாங்கித்தர ஒரு  ரெசிபி.





தமிழ் !!!





புதன், 10 ஆகஸ்ட், 2016

உலகிலேயே பிரமாண்டமான விமானம்!

 உக்ரேன் நட்டில் தயாரிக்காபட்ட 'Antonov An-225 Mriya', உலகெலேயே மிகப் பெரிய விமானம். ஆறு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானத்தின் எடை சுமார் 600 டன். இதன் இறக்கை, போயிங் 747 ரக விமானத்தைவிட இருமடங்கு பெரியது. 42 டயர்கள் கொண்ட இந்த விமானம் உக்ரேன் நாட்டில் இருந்து சுமார் 117 டன் எடைக்கொண்ட மின்சார ஜெனரேட்டர் ஒன்றை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு கொண்டுவந்துள்ளது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

உலகின் மிகவும் குட்டி நாடு


இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த சீலேண்ட்  நாடு.
இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?

அப்படி அந்தப் போர் தொடங்கியபோது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது.
கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.
1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார். இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர்.
இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார். அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.


கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது.

ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போனபோது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள்.

பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள். 1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை.

சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார்.



தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக்கொண்டுதான் வர வேண்டும்.






புதன், 27 ஜூலை, 2016

இந்த படம் நான் பாத்துட்டேன் நீங்க? - கபாலி


கபாலி படத்தை பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் ஏற்கனவே வந்துடுச்சு.இது தலைவர் படம் இல்ல ,நாங்க ரஜினிகாந்தை இப்படி திரையில எதிர்பாக்கலைனு சொன்னவங்கங்களுக்கு உண்மையிலயே ரசிக்க தெரியலைனு தான் சொல்ல தோணுது..நாம எப்போதான் வளரப்போறோமோ தெரியல!!!

ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகன்..அது ஆரம்பகாலத்திலேயிருந்து அவரோட படத்தை பார்த்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.அதுலயும் திரு.பாலச்சந்தர்,திரு.பாலுமகேந்திரா,திரு.மகேந்திரன் போன்ற இயக்குநர்களோட இயக்கத்துல திரு.ரஜினி நடிச்ச படங்களை பாக்கும்போது ரொம்ப நல்லாவே தெரியும்.

ஒரு கட்டத்துல இவர் மாஸ் ஹிட்க்குள்ள நுழைஞ்சுட்டார்..அப்போதிலிருந்து இவர்கிட்ட அதுமாதிரி மசாலா படங்களை ரசிகர்கள் எதிர்பாக்க ஆரம்பிச்சுட்டாங்க..அதே சமயம் அவரோட நடிப்புக்காக ,அவரோட நடிப்பை விரும்பி பாத்தவங்க கொஞ்சம் விலகிட்டாங்கனு சொல்றதுதான் உண்மை..

அவரும் இத்தனை வருஷம் opening song ஒரு   தத்துவப்பாட்டோட ,பாம்புக்கு பயப்படுறமாதிரி, லவ் சொல்ல வெக்கப்படுறமாதிரி, ஹீரோயின்க்கு முத்தம் கொடுக்க கூச்சப்படுறமாதிரி , எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி,அந்த கதாபாத்திரத்துக்கு இன்னோர் பக்கம் இருக்குறமாதிரி,பஞ்ச் வசனைகளோடலாம்  நடிச்சாதான் ரசிகர்கள்   விரும்புறாங்கனும்,தன்னைவச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடஞ்சுடக்கூடாதுனும் முடிவுபண்ணி நடிச்சுட்டாரு..

commercial , entertainment படம்னு  சொல்லி சொல்லி இத்தனை நாள் நாமதான் இவர்கிட்ட இப்படிப்பட்ட படங்களை எதிர்பாத்திக்கிட்டே இருந்தோம்..அதேசமயம் இப்படியே இன்னும் நடிச்சுக்கிட்டு இருக்காருனும் குறை சொல்லிக்கிட்டே இருந்தோம்..

எவ்ளோ வருஷத்துக்குமேல இப்போதான் பழையபடி தனக்குள்ள இருக்குற நடிப்பை இந்த படத்துல வெளில கொண்டுவந்துருக்கார்..மேக்கப் இல்லாம ,அவ்ளோ ஒரு அழகான நடிப்பு..சின்ன சின்ன கண் அசைவுகள் ஆகட்டும், மனைவியை தேடி அலையும் போது அந்த தவிப்பும் ஏக்கமுமாகட்டும் ,மனைவியை பாத்ததும் கண்ணுலையே வெளிப்படுத்துற அந்த காதலாகட்டும் எனக்கு ஜானி படம் நினைவுக்கு வந்தது..இந்த படம் ரஜினிகாந்த்னு ஒரு நடிகரோட நடிப்பு திறமையை வெளிப்படுத்துற படங்களின் லிஸ்ட்ல கண்டிப்பா இடம் பிடிக்கும்..

கலையரசனுக்கு மெட்ராஸ் படம் அளவுக்கு இதுல நடிக்க வாய்ப்பில்லைனாலும் தன்னோட potion -ஐ நல்லா பண்ணிருக்கார்.அது மாதிரியே ஜான் விஜய்,அட்டகத்தி தினேஷ்,திரு.நாசர்,கிஷோர் (எவ்ளோ தங்கம் உடம்புல) தன்னோட portion -ஐ நல்லா பண்ணிருக்காங்க.அதுலயும் அட்டகத்தி தினேஷ் body language சிரிப்பை வரவைக்குது..ராதிகா ஆப்தே  மற்றும் தன்ஷிகா ஆக்ட்டிங் செம .. பிற்பாதியில் கொஞ்சம் ரத்தம் அதிகமா காட்டியிருக்காங்க..

சந்தோஷ்நாராயணனோட இசையும் பின்னணி இசையும் நல்லா இருந்தது...நெருப்புடா நெருப்பு மாதிரி இருக்குனு சொன்னா , மாய நதி பாடலும், வானம் பார்த்தேன் பாடலும் அவ்வளவு இனிமை.அதுவும் அந்த  மாயநதி பாடல்ல ரஜினியோட expression அந்த வயசுக்கு உரிய அந்த matured love , WOW...

படத்தை நீங்களே போய் பாருங்க..மகிழ்ச்சியா ரசிங்க...