பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 27 ஜூலை, 2016

சிலவிஷயம் உங்களோடு

கபாலி படத்தோட டீஸர் எப்போ வந்ததோ அப்போ இருந்து எங்க பாத்தாலும் எதுல பாத்தாலும் எங்க கேட்டாலும் எதுல கேட்டாலும் கபாலி கபாலி  கபாலி-னு ஒரே கபாலி மேனியாவா இருந்தது..


எல்லா சமூக வலைத்தலளங்களும் கபாலி பத்தி ஏதாவது ஒரே செய்தியை தினம் தினம் வெளியிட்டுக்கிட்டே இருந்தாங்க..கோடிக்கணக்கான ரசிகர்கள் தினம் தினம் திரு.ரஜினியை பத்தி ஏதாவது ஒரு  செய்தி வெளியிட்டுக்கிட்டே இருந்தாங்க...ஒரு ஒரு நாளும் கபாலி பத்தி சுட சுட செய்தி வெளிவந்துக்கிட்டே இருந்தது. எல்லாத்துக்கும் மேல Air Asia விமானம் கபாலி பட போஸ்டர் ஒட்டி உலகத்தையே திரும்பி பாக்க வச்சாங்க.

ட்ரைலர்  மட்டும் 25 மில்லியன் வியூ -க்களை கடந்தது..உலகம் முழுக்க 30 நாடுகள்ல 10000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுது  . கபாலி திரைப்படம் உலகத்திலேயே  மிகப்பெரிய திரையரங்கான பிரான்ஸ்ன் Le Grand  Rex -ல திரையிடப்படுற  முதல் தமிழ் படம்னு பெருமையை பெறப்போகுது ..US-ல மட்டும் 300 திரையரங்குகளுக்கு மேல திரையிடப்படுது ..டிக்கெட் புக்கிங் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல அதனை டிக்கெட்களும் வித்துடுச்சு.இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போறாங்க ...

இது எல்லாமே படம் வெளியாகுறத்துக்கு முன்னாடி ரசிகர்களோடு பல்ஸ் -ஐ எகிற வச்சது மட்டும் இல்லமா ஒட்டு மொத்த உலகத்தையும் யார் இந்த கபாலி-னு திரும்பி பாக்க வச்சது..

ஆனா படம் வெளியான முதல் நாளுளையே படம் சரியில்ல..படத்துல காமெடி இல்ல..இது ரஜினி படம் மாதிரி இல்ல..டைரக்டர் ரஞ்சித் சமூகத்தை பத்தி , தான்  சொல்லணும்னு நினைச்ச எல்லாத்தையும் ரஜினியின் வாயிலா சொல்லிருக்கார் அப்படி இப்படினு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் அள்ளிக்கிட்டு இருக்குறதும் இதே படம்தான்.


ஒரு விஷயம் புரியமாட்டேங்குது..இது எல்லாம் நிஜமாவே ரசிகர்கள் தான் சொல்றாங்களா?

நாங்க ஜாலியா ரெண்டு மணிநேரம் படம் பாத்து எங்க டென்ஷன் எல்லாத்தையும் மறக்கவரோம். காசு குடுத்து படம் பாக்குறோம். இங்கையும் வந்து படத்தை பாத்து டென்ஷன் ஆகி கதையை விட்டு வெளில வரமுடியுமா அதையே ரெண்டு நாள் நினைக்குறமாதிரி மனசுல ஆழமா பதிஞ்சுடுதுனு  நாம தான் சொல்றோம்.. சரினு commercial -ஆ படம் எடுத்தா என்ன படம் இது ?? கதையே இல்ல , 4 பாட்டு 3 சண்டைனு அங்க அங்க காமெடினு படம் போகுது .. படம் பாத்த உணர்வே இல்ல .மனசுல நிக்கல.நம்மாளுங்களுக்கு இப்போலாம் கதையை யோசிக்கவே தெரியலனும் நாமதான் சொல்றோம்.

ரஜினி எப்பப்பாரு commercial -ஆ நடிக்குறார்..அவரோட வயசுக்கு ஏத்த கதாப்பாத்திரத்தை தேர்வு செய்யமாட்றாரு.. இன்னும் ஹீரோயின்களோட மரத்தை சுத்தி டூயட் பாடிக்கிட்டே இருக்கார்.படங்கள் ஒரே மாதிரி இருக்கு , எப்பவும்போலவே  படத்துல காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார்னு ஏகப்பட்ட விமர்சனங்கள் சொன்னாங்க..சரினு ஒரு படத்துல டைரக்டர் சொல்றதை மட்டும் நடிச்சு தன்னோட வயசை அப்டியே வெளிப்படுத்தி மரத்தை சுத்தி  டூயட் பாடாம ஹீரோயினுக்கு முத்தம் குடுக்காமனு நடிச்சா இது தலைவர் படம் மாதிரி இல்ல ,காமெடி இல்ல, commercial -ஆ இல்ல, entertainment -ஆ இல்ல.. ஜாதி பத்தி,அரசியல் பத்தி,புரட்சி பேசுற வசனமா இருக்குனு சொல்றாங்க  ..

புதுசா வர டைரக்டர்களுக்கு வாய்ப்பை குடுக்கமாட்றார்  , safe -ஆ நடிச்சுக்கிறார்னு சொன்னாங்க  .சரினு ஒரு புது இயக்குனருக்கு வாய்ப்பை கொடுத்து  இது அவரோட கதை அவரோட படம்னு,  தன்னோட விருப்பத்தை படத்துல திணிக்காம எல்லாமே டைரக்டர் சொல்றதுதான்னு அவர் சொல்றமாதிரி நடிச்சுக்கொடுத்தா அதுக்கும் குறை சொல்றோம்..

ஒரு மனுஷனை எப்படித்தான் நடிக்கணும்னு எதிர்பாக்குறோம்?..அப்போ நாம கேட்ட மாதிரி commercial -ஆ entertainment  பண்ணின லிங்கா படத்தை ஏன் நல்லா ஓட வைக்கல??

ஒரு தயாரிப்பாளனுக்கு தான் காசு குடுத்து வாங்கின படத்தை நல்லா வசூல் ஆகவைக்கணும்னு நினைக்குறது என்ன தப்பு?? தன்னோட படத்தை அவர் எதுல வேணும்னாலும் விளம்பரம் பண்ண அவருக்கு உரிமை இருக்கு.. ஓரளவுக்கு பெயர் இருக்குற தயாரிப்பாளர்கள் கூட புதுமுக கதாபாத்திரங்கள் நடிச்சு, தான் வாங்கின படத்தையே 1000 தடவை டிவி-ல போட்டு விளம்பரம் படுத்துறாங்க.. ஒரு பெரிய தயாரிப்பாளர் தன்னோட படத்தை அதிகளவுல வசூலிக்க வைக்கணும் நிறையா பேருக்கு ரீச் ஆகணும்னு விளம்பரம் பண்றாங்க ..அவங்களால முடிஞ்சா ராக்கெட்ல கூட விளம்பரம் பண்ண அவங்களுக்கு உரிமை இருக்கு..உலக அளவுல ஒருத்தமிழ் படம் ரீச் ஆகியிருக்கு..நம்ம தமிழ் படங்கள் மேல ஒரு எதிர்பார்ப்பும் மரியாதையும் வந்திருக்குனு எடுத்துக்காம நாம என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கோம்.

கதை கதைனு நாம நிஜமாவே எதை எதிர்பாக்குறோம்னு தெரியலையே..ரஜினி ரஜினினு  அவரோட படத்துல அவர்கிட்ட இருந்து நாம என்ன எதிர்பாக்குறோம்னு நமக்கு தெரியலையே.?!

ஆமா, என்னோட படத்தை முதல் நாளே முதல் ஷோவே பாத்தாகணும் நீங்கன்னு என்னைக்காவது எந்த நடிகராவது சொன்னாங்களா?ஆமா யாரு நம்மள ஒரு டிக்கெட்-ஐ 1000,2000,3000 கொடுத்து வாங்க சொன்னா?ஒரு நாளாவது  நாம குடுக்குற பணத்துக்கான விலையைத்தான் அந்த டிக்கெட்ல போட்ருக்காங்களானு பாத்துருக்கோமா??ஏன் அதிக விலை குடுத்து வாங்குறோம்?..ரசிகர்கள்னு நாம பண்றதுதானே அதுலாம்..டிக்கெட் விலை அதிகமா இருக்கு எங்களுக்கு வேணாம்னு நம்மால சொல்லமுடியலையே.. 1000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி அதுல 120 ரூபாய்னு போட்ருந்தா அதுக்கு என்ன அர்த்தம்னு நமக்கு தெரியாதா?120 ரூபாய்க்கான கணக்கை  தவிர மத்த பணத்துக்கான கணக்கை அவங்க காட்ட முடியாது அப்போ அது  கருப்பு பணமா அவங்களை போய்  சேருதுனு கூட நம்மால யோசிக்க முடியலையா??இதுல நம்ம மேல எந்த தப்புமே இல்லையா?? இதுக்கு நடிகர்கள் ஒன்னும் பண்ண முடியாதே..இதுக்கு  government தான் நடவடிக்கை எடுத்திருக்கனும்..திருட்டு VCD-ல பாக்கக் கூடாதுனு அந்த Site-யயே block பண்ணினாங்க இல்ல அதுமாதிரி இதையும் தடுத்திருக்கணும்..

ஓட்டு போட்டு நம்மள ஆட்சி செய்றவங்களை நாமதான் செலக்ட் பண்றோம் .. அப்போ அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவையானதை நல்லதை நமக்கு சேரவேண்டியதை சரியா செய்ய வேண்டியது அவங்களா? நடிகர்களா?இல்ல நடிகர்கள் மேல அளவு கடந்த அன்பை வச்சுட்டு அவங்க படத்தை திருவிழா மாதிரி கொண்டாடிட்டு cutout, பாலாபிஷேகம், தேனாபிஷேகம்னு செஞ்சுட்டு ,ஆயிரக்கணக்குல பணத்தை குடுத்து டிக்கெட் வாங்கிட்டு ,நாங்க இவ்ளோ செய்றோம்ல  அதுக்கு பதிலா நீ எங்களுக்கு இது செய்யணும் அது செய்யணும்னு எதிர்பாத்து கேக்குறது நமக்கே அசிங்கமா தெரியலையா?? நாட்டுல வெள்ளம் வந்தா, மழை பேஞ்சா, வெயில் அடிச்சா நமக்கான உதவியை அரசாங்கம்  நமக்கு செய்யணும்னு எதிர்பாக்காம நமக்கு பிடிச்ச நடிகர்கள் நடிகைகள் செய்யணும்னு எதிர்பாக்குறது நமக்கே முட்டாள் தனமா தெரியலையா?

ஒருத்தங்களை தூக்கிவச்சு பேசவேண்டியது அவங்ககிட்ட இருந்து ஏதாவது எதிர்பாக்குறது,எதிர்பாத்தது கிடைக்கலைனா அப்டியே தூக்கிப் போட்டு உடைக்கவேண்டியது.. இந்த நடிகர் நடிச்ச படம்னா நல்லா படம் ஓடும், நல்லா லாபம் பாக்கலாம்னு வாங்கவேண்டியது நம்பிக்கைவெச்சு , ஓடலைனா உடனே நஷ்ட ஈடு கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டியது அசிங்கமா பேச வேண்டியது.. ஓடாத எல்லா படத்துக்கும் அப்படித்தான் நஷ்டஈடு கேக்குறாங்களா என்ன ?? சரி ரொம்ப நல்லா ஓடிச்சுனா அப்போ லாபத்துல ஒரு பங்க குடுக்குறாங்களா என்ன ??


நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்களா இருக்கலாம் வெறியர்களா இருக்குறது நம்மோட தப்பு .. சினிமாவுல அவங்க என்ன செஞ்சாலும் அதுதான் உண்மைனு நினைக்குறது நம்மோட தப்பு.நம்ம வீட்ல ஆகுற செலவுக்கு நாம தான் உழைக்கணும்னு நினைக்கமா யாரவது உதவி பண்ணுவாங்களானு எதிர்பாத்து இருக்குறது நம்மோட தப்பு.. நமக்கு தேவையானதை நாம தான் உழைச்சு சம்பாதிக்கணும் .. எவ்வளவு சம்பளம் வாங்குறார் அவர் நமக்கு என்ன செஞ்சார்னு ஏன் எதிர்பாக்குறோம்?? இந்த வயசுலயும் உழைச்சு சம்பாதிக்கிறார்...உங்களுக்கு இது செய்வோம் அது செய்வோம்னு சொல்லி பேசி நம்மள ஏமாத்தி நமக்கு உரிமையானதை நமக்கு சேரவேண்டியதை நமக்கு சேரவிடாம பண்ணலயே ..

அவர் தனக்கு நல்லா dance ஆடத்தெரியும்னு சொன்னதில்லை,அட்டகாகாசமா நடிக்கத்தெரியும்னு சொன்னதில்லை இருந்தும் , அவருக்கு இவ்ளோ கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்குறதுக்கு காரணம் அவரோட எளிமை, அவரோட குணம்.அதுக்கான மரியாதைதான் இது.

உழைக்காம எல்லாமே நமக்கு இலவசமா யாரா குடுத்தா  இல்ல கிடைச்சா நல்லா இருக்கும் நமக்கு  ..


உண்மையான அன்புக்குறது எதையும் எதிர்பாக்காம கொடுக்குறதுதான் ..அதுவே நமக்கு தெரியல ..



திங்கள், 25 ஜூலை, 2016

​பாடலின் வரிகள் - என் ஜீவன் - தெறி

படம் :தெறி  
பாடல் : என் ஜீவன்
பாடியவர்கள் : கௌசிக் ,பத்மலதா 
பாடலாசிரியர் :நா .முத்துக்குமார்   
இசை: G.V  பிரகாஷ்   



உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து  சாகத்தோணுதே

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

திங்கள், 4 ஜூலை, 2016

விஜய் டி.வி - கோபிநாத் - நீயா நானா - 7

நேத்து விஜய்டிவியின் நீயா நானால பங்கேற்றவங்க , அதிகமா படிச்சு பட்டம் வாங்கினவங்க ஒரு பக்கம் , அதிகமா பயணங்கள் (அதாவது அதிகமா சுற்றுலாபோறவங்க ) செய்றவங்க ஒருபக்கம்.

கொஞ்சம் interest-ஆதான் இருந்தது..அதுலயும் ஒருத்தர் 140 degree வாங்கிருக்கேன்னு சொன்னப்பபோ அவரை 'God of Graduation' திரு.பார்த்திபன் -னு சொல்லணும்னே தோணிச்சு.


தான் சம்பாதிக்கும் பணம் முழுவதுமே அவரோட படிப்புக்கு செலவாகிடும்னு சொன்னார் இந்த அற்புத மனிதர்.

இவரை மாதிரியே இந்த பக்கம் பேசினவங்க எல்லாருமே குறஞ்சது  5 பட்டம் ,அதுக்கும் மேல மேல , வாங்கிருக்குறவங்க தான்.ஒரு ஒருஒருத்தரும் ஒரு field -ல மட்டும் படிக்காம பல field-ல படிச்சு பட்டம் வாங்கினவங்க..

எதிர்புறம் பேசினவங்கல ஒருத்தர் கேட்டார் , ஏன் இப்படி zig zag -கா படிக்குறீங்க.ஒரு field -ல படிக்காம இப்டி எல்லாத்தையும் படிக்குறீங்க தெளிவு இல்லாத மாதிரி இருக்கு இதுனு . என்ன கேட்டா , இதுல தப்பு எதுவும் இல்லையே..ஏன் ஒரே filed -ல தான் படிக்கணுமா என்ன ? வேற வேற field -ல படிக்கும் போது மத்த field பத்தியும் தெரிஞ்சுக்கமுடியுமே . ஒரே root ல தான் போகணுமா என்ன?அப்போ இங்க வேலை செஞ்சு சம்பாதிக்குறவங்க எல்லாருமே தான் படிச்ச fieldல மட்டும் தான் போயிட்டு வேலை செய்றாங்களா?.அப்டி தான் வேலை செஞ்சாகணும்னா பலபேர் வேலை இல்லாம / ரொம்ப குறைஞ்ச சம்பளத்துக்குத்தான் வேலை செஞ்சுக்கிட்டு இருப்பாங்க..இது அவங்க அவங்களோட ஆர்வம்..நிறைய படிக்கணும்னு passion இருக்கும் சில பேருக்கு..so படிக்குறாங்க.அவங்க விருப்பப்பட்டு தான் படிக்கிறாங்க.விருப்பம் இல்லாம யாராலயும் எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது இல்லையா.

வெள்ளி, 1 ஜூலை, 2016

பின்லாந்து‬ கல்விமுறை !!

உலகில் தலைசிறந்த கல்வியில் ‪#‎பின்லாந்து‬ முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது...

ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

செவ்வாய், 17 மே, 2016

ரயிலின் ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

ரயிலின் ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A

முதல் எழுத்து:

முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2

இரண்டாம் எழுத்து:

இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி

புதன், 4 மே, 2016

பெர்முடா முக்கோணம்

அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை எவ்வளவு வளர்ச்சி பெற்று முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில், அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும் வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான் 'பெர்முடா முக்கோணம்' இன்று வரை திகழ்கிறது.




வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில், ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியை கடந்துச் சென்ற ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மான முறையில் காணாமல் போயிருக்கின்றன. அவை அனைத்தும் என்ன ஆனது என்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க எந்த வான தூதனும் இதுவரை இறங்கி வரவில்லை.

காணாமல்போன பட்டியலில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானங்களும், கப்பல்களும் ஏராளம். அதி நவீனத்தையே பெரிதும் நம்பியிருக்கும் அமெரிக்கா, இந்த கடல் பகுதியில் பல மர்மங்கள் மறைந்திருப்பதை இன்று வரை மறுத்துதான் வருகிறது. ஆனாலும், காணாமல்போகும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறித்த செய்திகள் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இதனிடையே வேற்று கிரக உயிரினங்கள் மற்றும் கண்களுக்கு புலப்படாத ஜீவராசிகள் இப்பகுதியில் வசிப்பதாக வெகு ஜன மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இங்கு நிகழக்கூடிய எந்த மாயங்களையும் இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.