பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 13 ஜனவரி, 2016

இலவச சேனல்கள் ,Satellite Tracking

இலவச சேனல்கள் பெறுவதை பற்றியும்
Satellite Tracking செய்றது பற்றியும் Vsk Kalyan WB என்பவர் FB-ல் பதிந்த தகவல்களை அப்படியே இங்கு பகிர்கிறேன்

அவருடைய பதிவில் இருந்து,

முதல்ல Satellite Track பண்றது பத்தி சொல்லிருறேன் ....

பொதுவா ரெண்டு வகை மேஜர் அலைவரிசைகள் தான் இந்தியாவுல ஒளிபரப்புக்கு பயன்படுத்துறது ஒன்னு C-BAND & ரெண்டு KU-BAND...

C-BAND ங்கறது 4 FEET, 6 FEET,8 FEET,12 FEET, டிஷ் பயன்படுத்தி Track செய்றது

KU-BAND ங்கறது வெறும் சின்ன டிஷ் கொண்டே Track செய்யலாம்... (sun direct dish tv videocon etc எல்லாமே சின்ன டிஷ் தான்)

இப்ப நாம KU-BAND தான் Track செய்றத பத்தி சொல்றேன்..
v Satellite Track செய்ய ஒரு சின்ன டிஷ் - ஒரு LNB ஒரு ரிசீவர் கொஞ்சம் ஒயர் போதுமானது .... (Require Picture)

உங்களிடம் பழைய டிஷ் அதுலயே LNB ஒயர் இருந்தா வெறும் ரிசீவர் மட்டும் வாங்கினா போதுமானது , மற்ற PRIVATE சன் டைரெக்ட் வீடியோகான் ஏர்டேல் டாடா ரிலையன்ஸ் etc ரிசீவர்கள் பயன்படுத்த முடியாது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்!




அலைகள் மோதும் கடலுக்கு நடுவே ஒரு அதிசய விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதுவும் நமது இந்தியாவில்தான் இப்ப‍டியொரு ஆச்சரிய விமான நிலையம்.

விமானம் தரை இறங்கச்சற்று நிமிடங்களுக்குமுன், விமானத்தில் இருந் து பார்த்தால், கடல்தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்களு க்கு திகிலுடன் கூடிய ஆச்சரிய நிகழ்வாக இது தோன்றும் . ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும்.

அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று.

அரேபியக் கடலில் இருக்கும் 36 தீவுகளைக் கொண்ட லட்சத்வீப், மத்திய அரசால் இயங்கும் சுற்றுலாத் தலம். கப்பல்களில் மட்டுமே செல்ல முடிந் த அகட்டி தீவில், 1987-ல் விமான நிலையம் கட்டத் தொடங்கி, 1988-ல் முடிவடைந்து, விமான சேவை தொடங்கியது. விமானங்கள் இறங்க, 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ரன்வேயின் நீளம், 1,204 மீட்டர்கள். அகலம், 360 மீட்டர்களே.

பயணிகள் இங்கு இறங்கியதும், கப்பல்கள் மூலம் மற்ற தீவுகளுக்குச் செல்லலாம். சுற்றிலும் கடல் நீர் இருக்கும். இந்தத் தீவுக்கு, பெங்களூரு, கொச்சியில் இருந்து சிறிய வகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன...

செவ்வாய், 22 டிசம்பர், 2015

வாங்க கேக்கலாம் ...

எம்எஸ்வேர்ட் ,PDF ஃபைல்,பவர் பாயிண்ட் ,இணையத்தளப்  பக்கங்கள் ,ஈமெயில் இது எல்லாத்துலையும் இருக்குற செய்தி பேச்சு வடிவத்துல இருந்தா நேரம் மிச்சம் பண்ணலாமேனு கூட சில பேருக்கு தோனும் இல்ல...அப்டியாப்பட்டவங்களுக்கு ஒரு இணையத்தளம் இருக்கு ...


Www.Spokentext.net ...இந்த இணையத்தளம் எழுத்து வடிவத்துல இருக்குறதை அப்டியே ஆண்/பெண் குரல்ல மாத்தி ஒலி வடிவத்துல நமக்கு தரும்..

இதுக்கு இந்த தளத்துல இலவச உறுப்பினராகி நமக்கு ஆடியோவா கேக்கவேண்டிய ஃபைல்லை குடுத்து ,குரல் மற்றும் ஒலியை தேர்வுசெஞ்சா போதும்..ஆடியோ  ஃபைல் கிடைச்சுடும்..இதை டவுன்லோட் பண்ணிக்கலாம் ..

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்றால் என்ன?

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுததத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம்‘ என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக் அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம்.

காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக் முக்கியம்.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

எல் நினோவை பற்றிய தகவல்கள்!!

சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino) என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...

1. 'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும் அழைக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'

சனி, 5 டிசம்பர், 2015

சென்னை: உணவு வேண்டுபவர்கள் தொடர்பு கொள்க...

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்களால் உணவு மற்றும் உதவிப்பொருட்கள் உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அண்ணா நகரில் ஒவ்வொரு வேலைக்கும் (காலை, மதியம், இரவு) 5000 உணவு பொட்டலங்கள் தயார் செய்கின்றனர். இவர்களை தொடர்பு கொண்டு எந்த இடத்துக்கு உணவு வேண்டும் என்று கூறினால் அவர்களே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். அதனால் உணவு தேவை என்று தொடர்பு கொள்பவர்களுக்கு கீழே இருக்கும் தொடர்பு எண்ணை கொடுத்து உதவுங்கள்.

பெயர்: பாலா
இடம்: அண்ணா நகர்
தொலைப்பேசி எண்: 9952918699

கார்த்தி
தொலைப்பேசி எண்: 9840643633

நவீன்:
தொலைப்பேசி எண்: 8807777797

சதீஷ்
தொலைப்பேசி எண்: 9941084807

லோகேஷ்
தொலைப்பேசி எண்: 9791044503