பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 14 ஜூலை, 2014

கியாஸ் கசிவு புகார் !!!


கியாஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி – ஐ.ஓ.சி அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனம் இன்டேன் கியாஸ் வாடிக்கையாளர்களுக்காக புதிய இலவச தொலைபேசி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த எண் 1800-425-247-247.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன.475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய சேவை வசதியை இன்று முதல் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொலைபேசி மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும். கியாஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி மெக்கானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும்.

1 கருத்து: