பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 12 ஜூலை, 2014

தூக்கம்

என்னுடைய 500-ஆவது போஸ்ட் இது..இந்த 500-ஆவது போஸ்ட்ல எனக்கு பிடிச்ச விஷயத்தை பத்தி ( :) ) பகிர்ந்துக்குறதுல எனக்கு சந்தோஷம் .


தூக்கம் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் ...


-தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே பாலூட்டி மனித இனம் மட்டுமே.

-தூக்கத்துக்கு இடையில் சராசரியாக 6 முறை விழிக்கிறோம்.

-ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுசு குறையும்.

-ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை பசியைத் தூண்டும்.-பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூங்குகிறார்கள். அதாவது 25 ஆண்டுகள்.

-சில திபெத்திய பௌத்தத் துறவிகள் உட்கார்ந்துகொண்டே தூங்குகிறார்கள்.

-தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

-தூங்கும்போது தும்ம முடியாது.

-6-19 டிகிரி செல்சியஸ்தான் நன்றாகத் தூங்குவதற்கான வெப்ப நிலை என்று ஆய்வு சொல்கிறது. மேலே போர்த்தாமல் இருந்தால் 30-32 டிகிரி செல்சியஸில்கூட நன்றாகத் தூங்கலாம்.

-கனவில் ஏற்கெனவே பார்த்த முகங்களே வரும்.

-நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றியே பெரும்பாலும் கனவு காண்கிறோம். வளர்ந்தவர்கள் மனிதர்களைப் பற்றியும், குழந்தைகள் விலங்குகளைப் பற்றியும் அதிக கனவுகளைக் காண்கிறார்கள்.

-சில பேர் 2 மாதம் வரை சாப்பிடாமல் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், 11 நாளுக்கு மேல் தூங்காமல் வாழ முடியாது. சாதாரணமாக 2 நாள்களுக்கு ஒருவரால் தூங்காமல் இருக்க முடியும்.

-சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும்.

-பூனைகள் தங்கள் வாழ்க்கையில் 70 சதவீத நேரம் தூங்குகின்றன.

-கடல் நீர் நாய்கள் தூங்கும்போது கைகளைப் பிணைத்துக்கொண்டு தூங்கும். அதன் மூலம் அலையில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கின்றன.

-சில உயிரினங்கள் தூங்கும் போது பாதி மூளையை மட்டுமே ஓய்வுக்கு அனுப்புகின்றன. ஓங்கில்கள், திமிங்கிலங்கள் இப்படிச் செய்வதால் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து காற்றை சுவாசிக்கவும், எதிரிகள் வருவதை உணரவும் பயன்படுகிறது.

-வாத்துகள் ஒரு கண்ணை மூடிக்கொண்டு, பாதி மூளையை ஓய்வுக்கு அனுப்புகின்றன.

-ஒரு சில பறவைக் குழுக்களில் சில பறவைகள் விழித்திருக்கும்போது, மற்ற பறவைகள் தூங்கும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக