பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 8 ஜூலை, 2013

இசை

இசையை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது.ஏதோ ஒரு விதத்துலஇந்த இசை நம்மகூட பயணம் பண்ணிகிட்டே இருக்கு.

சந்தோஷமான சமயத்துல துள்ளலான இசை கேக்குறதும் ,மனசு சரியில்லைனா சோகமான பாட்டு கேக்குறதும்,நம்மளோட ஒரு ஒரு உணர்வையும் வெளிப்படுத்த இந்த இசையை விட பெரியது எதுவும் இருக்க முடியாது.

இந்த இசைக்கு பல விதமான நோய்களை குணமாக்கும் ஆற்றல் இருக்குனு உங்களுக்கு தெரியுமா? ஆமாம் ..உண்மைதான் ,இந்த இசை பலவிதமான நோய்களை குணப்படுத்துது .அது என்னனு இப்போ பாப்போம்.


* இசை கேட்க்கும் போது இதய நோய் படிப்படியா குணமாகுது

*ரெத்த அழுத்தம்,மன அழுத்தம்,மன இறுக்கம், சீரற்ற இதய துடிப்பு இது எல்லாமே நல்ல இசையை கேக்குறதால குணமாகுது.

*மத்தளம் , டிரம்ஸ் போன்ற தோல் கருவிகள் மனக்கிளர்ச்சியை அதிகப்படுத்தி தசைநார்களை தளரசெய்யுது.அதனாலதான் தீமிதி,அலகு குத்துறது ,போர்களங்கள் இங்க எல்லாம் தாரை,தம்பட்டங்கள் வாசிக்குறாங்க.அதனால  உடம்பு புத்துணர்ச்சி பெறுது.


ராகங்களுக்கு நோய்களை குணமாக்குறதுல முக்கிய பங்கு இருக்கு.

* அமிர்தவர்ஷினி ராகம் - மழையை வரவைக்கும்.உடலை குளிர்ச்சியாக்கும்.

* ஹம்சத்வனி ,பீம்பிளாஸ் - மனம்சார்ந்த பிரச்சனையை தீர்க்கும்

* சந்திரகவுன்ஸ் -  இருதய நோயை சரி பண்ணும்

* பகாடி - மன அழுத்தத்தினால் ஏற்படுற நீரிழிவை கட்டுப்படுத்தும்.

* பைரவி - ஆஸ்துமா,சுவாசம் சம்மந்தமான மற்றும் ,டி.பி ,புற்றுநோய்களை சரி பண்ணும்.

* ஹிந்தோளம் - வாதம் ,குறைந்த ரெத்த அழுத்தம் ,உயர் ரெத்த அழுத்தம் இவைகளை சரி பண்ணும்

* சாரங்கா - பித்தத்தை சரி பண்ணும்

* பிலஹரி ,தர்பாரி - மன அழுத்தத்தை சரி பண்ணும்

* பாகேஸ்ஸ்ரீ ,தர்பாரி - தூக்கம் இன்மையை சரி பண்ணும்

* தோடி  -தலைவலியை குணமாக்கும்

* ஆகிர்பைரவி -அஜீரணத்தை சரி பண்ணும்

உடனே , இனி  முடியலைனா டாக்டர் கிட்ட போகமாட்டேன் இந்த இந்த ராகத்துல இருக்குற பாட்ட மட்டும் பாடுவேன் கேப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்க கூடாது . அதையும் செய்யணும் அதோட சேத்து இதையும் கேக்கணும்/பாடனும்.நம்ம முயற்சியும் வேணும் இல்லையா.?!!!

சரி இந்த ராகங்களுக்கு என்ன உணர்சிகள்னு பாப்போமா

* சிந்துபைரவி ,ரீதிகெளளை - கருணை

* முகாரி ,ரேவதி,சிவரஞ்சனி -சோகம்

* ஹம்சத்வனி - வீரம்

* மத்தியமாவதி ,சஹானா - மன அமைதி

* கானடா, பாகேஸ்ஸ்ரீ - பக்தி

* நீலாம்பரி - தாலாட்டு

* கரகரப்பிரியா - மன உறுதி, மன அமைதி

* சிவரஞ்சனி , புன்னாகவராளி ,சஹானா - அதீத ஆத்திரத்தை போக்கும்

                             -நன்றி  வாரஇதழ் 




2 கருத்துகள்: