பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 10 ஜூலை, 2013

ஹாட் நியூஸ்

அக்னி நச்சத்திரம்முடிஞ்சாலும் .வெயில் கொளுத்துது.தினமும் நியூஸ்ல இத்தனை டிகிரி வெப்பம் ,இதனை பாரன்ஹீட் வெப்பம்னு சொல்றதை கேக்குறோம் .ஆமா அதென்ன டிகிரி,பாரன்ஹீட். தெரிஞ்சுப்போமா?

* வெப்பத்தை அளக்க பயன்படுவது வெப்பநிலைமானி அதாவது தெர்மோமீட்டர்  .இது நாம எல்லாருக்குமே தெரியும்.

*இந்த டிகிரி,பாரன்ஹீட்,செல்ஷியஸ் இதை எல்லாம் கண்டுபிடிச்சவங்க ஆண்டர்ஸ் செல்ஷியஸ்,ஜி.டி பாரன்ஹீட்.


*வெப்பநிலைய அதிகபட்சம்,குறைந்தபட்சம்னு ரெண்டு விதமா சொல்றோம்.

*அதிகபட்சம் வெப்பநிலைமானில பாதரசமும் ,குறைந்தபட்ச வெப்பநிலைமானில ஆல்கஹாலும் பயன்படுத்தப்படுது.

*இந்த திரவங்கள் வெப்பத்துக்கு ஏற்ப சுருங்கி விரிஞ்சு வெப்பத்தோட அளவை எண் அளவா காட்டுது.

*வானிலை ஆய்வு மையத்துல குறைந்தபட்ச வெப்பநிலை காலை 7.20 மணிக்கும் ,அதிகபட்ச வெப்பநிலை மதியம் 2.20 மணிக்கும் கணக்கிடப்படுது.

*சில நேரத்துல செல்ஷியஸ்னும் ,சில நேரத்துல பாரன்ஹீட்னும் வெப்பத்த குறிப்பிட்றத  பாத்துருப்போம். செல்ஷியஸ் தான் உலக அளவிலும் இந்தியாவிலும் ஏத்துகொள்ளப்பட்ட ஒன்னு.

*இத எப்படி கண்டுபிடிக்குறாங்க?

                       oC = (oF - 32) x 5/9

பாரன்ஹீட் அளவிலிருந்து 32ஐ கழிச்சு அதோட 5/9ஐ பெருக்கினா கிடைக்குற அளவு தான் செல்ஷியஸ்.

இப்போ 100 பாரன்ஹீட் இருக்குனா 37.8 செல்ஷியஸ்னு  அர்த்தம்.எப்படி?

                      100 oF = (100 - 32) x 5/9 =37.8 o C

* இதே மாதிரி செல்ஷியஸ்யை பாரன்ஹீட்க்கு மாத்தனும்னா

                       oF = (oC x 1.8) + 32

அதாவது  செல்ஷியஸ் அளவை 1.8-ஆல்  பெருக்கி அதோட 32 கூட்டினோம்னா கிடைக்குறது பாரன்ஹீட் அளவு.

என்ன ஈஸியா இருக்கா  ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக