பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஷாவ்ளின் கோவில்

தென்னிந்தியாவிலிருந்து புத்த மதத்தை பரப்புறதுக்கு 'போதி தர்மன் ' சீனாவிற்க்கு போனார்.அப்போ அந்த மதத்தை பரப்புறதுக்கு சில சண்டைக்கலையையும் கத்துக்குடுக்க ஆரம்பிச்சார் அதுல ஒண்ணுதான் இந்த குங்ஃபூ. (  'போதி தர்மன் ' பத்தி ஏழாம் அறிவு படம் மூலமா நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்)
 
இந்த குங்ஃபூ -ங்குற தற்காப்பு கலை பிறந்த இடம் தான் இந்த ஷாவ்ளின் கோவில்.


இந்த கோவில் 1500 வருஷம் பழமையானது .சீனாவுல 'குஷாங்கே சான் ' மலைத்தொடர்ல 7 மலைகள்  இருக்கு.இந்த மலைகள் சீனர்களால புனித மலையா கருதப்படுது.இதுல ஒரு மலை 'மவுண்ட் சவோசி '.இந்த மலையோட வடதிசைல தான் ஷாவ்ளின் கோவில் இருக்கு.


இந்த குங்ஃபூ கலைல 72 வகை இருக்கு.அதுல 15 வகை தான் இப்போ சொல்லிகுடுக்கப்படுதாம்.

இந்த கலையை கத்துக்குறவங்களுக்கு இரும்பு போல உடம்பும்,திடமான மனசும் ரொம்ப முக்கியம்னு சொல்றாங்க.


இந்த கலையை முறையா கத்துக்க 3ல இருந்து 10 வருஷம் ஆகுமாம்.

இந்த கோவில் 1977ல முதன் முதலா 'ஷாவ்ளின்  டெம்பிள்'ங்குற படத்துல வந்தது.அபாரம் நேஷனல் ஜியாகராபி சேன்னல்ல  இந்த கோவில் பத்தி ஒரு தொடர் வந்துருக்கு,அப்பறம் புரூஸ்லீ ,ஜாக்கிசான்,ஜெட்லீனு இங்க இவங்க நடிச்ச படங்கள் மூலமா இந்த கோவில் பிரபலம் ஆகிருக்கு.


ஜாக்கிசான் ,வில் ஸ்மித்  பையன் ஜேடன் ஸ்மித் நடிச்ச 'கராத்தே கிட் ' பாத்துருக்கீங்களா ?அதுல ஜேடனுக்கு பயிற்சி குடுக்க சீனப் பெருஞ்சுவருக்கு ஜாக்கிசான் கூப்பிட்டுபோவார் ,அப்போ அங்க தெய்வமா வழிபடுற சில சிலைகளுக்கு நடுவுல  'போதி தர்மன் '  சிலையும் இருக்கும்..
இதை கூட நான் 'ஏழாம் அறிவு' படம் பாத்ததுக்கு அப்பறம் மறுபடியும்  'கராத்தே கிட் '  டிவிடி பாத்து எங்க இவர் சிலைன்னு தேடினேன் .அப்போ தான் பாத்தேன்.இது நம்ம தப்பில்லைங்க.அவர யாரு புத்த மதத்தை பரப்புறதுக்கு சைனாக்கு போக சொன்னது?இங்கயே இருந்து நம்மாளுங்களுக்கு சொல்லிதரவேண்டியதுதானே ?சரி போனது தான் போனாரு,விஷம் வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சது இல்ல ,சாப்டாம வரவேண்டியதுதானே ?அதையும் பெரிய மனசு தனமா பண்ணிட்டு நமக்கு யாருனே தெரியலைன்னு குற சொன்னா எப்படி நீங்களே சொல்லுங்க.


3 கருத்துகள்:

 1. கோவிலின் சிறப்புகளுக்கு நன்றி...

  மற்ற எந்த தளத்திற்கும் செல்வதில்லை என்பதையும் அறிந்தேன்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரியல./*.மற்ற எந்த தளத்திற்கும் செல்வதில்லை என்பதையும் அறிந்தேன்.*/ இதுக்கு அர்த்தம் புரியல...வேற ப்ளாக் சொல்றீங்களா?நான் நிறையா ப்ளாக் பாப்பேன் அதுல போஸ்ட்களுக்கு உங்க கமெண்ட்ஸ் பாக்க முடிஞ்சது அதான் நீங்க நிறையா ப்ளாக் பாப்பீங்க போலனு சொன்னேன்..

   நீக்கு
 2. கரேட்டா சொன்னிங்க!

  பதிலளிநீக்கு