பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 7 ஜூலை, 2013

பாடலின் வரிகள் - கடவுள் தந்த அழகிய வாழ்வு - மாயாவி

படம் :மாயாவி 
பாடல் : கடவுள் தந்த அழகிய வாழ்வு
பாடியவர் :  spb சரண்,கல்பனா 
இசை : தேவி ஸ்ரீ பிரசாத் 

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர்  துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின்
வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு


பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் எந்நாளும்
நெஞ்சில் தீராமல் வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு

நாம் எல்லாம் சுவாசிக்க
தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை  பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிறும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும்   உள்ளங்கள் உண்டு
கண்ணீர்  துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின்
வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

---------------------------------
எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள்..
"கோடையில் இன்று இலையுதிறும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே"

நான் சோர்ந்து போகும் போது கேக்குற பாட்டுல இதுவும் ஒன்னு .நிச்சயமா உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்


6 கருத்துகள்: 1. பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது. அடுத்த தடவை இதுமாதிரி பாடல்களை அறிமுகப்படுத்தும் போது யூடியுப்பில் இருந்து வீடியோ க்ளிப் இருந்தாலும் சேர்த்து வெளியிடுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ...எனக்கு பிடிச்ச பாட்டு தலைப்புல ஒரு பேஜ் இருக்கும் பாருங்க அதுல எல்லா பாட்டையும் நீங்க பாக்கலாம்

   நீக்கு
 2. மிகவும் பிடித்த பாடல்... சமீபத்திய எனது பகிர்வில் உண்டு... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தனபால் அண்ணே ,கொஞ்ச நாள் உங்க கிட்ட இருந்து கமெண்ட்ஸ் எதுமே வரலையே

   நீக்கு
 3. பாடல் வரிகள்
  அற்புதமாக
  இருக்கிறது.

  பதிலளிநீக்கு