பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 18 செப்டம்பர், 2014

பாடலின் வரிகள் - மணப்பெண்ணின் சத்தியம் - கோச்சடையான்

படம் :கோச்சடையான் 
பாடல் : மணப்பெண்ணின் சத்தியம் 
பாடியவர்கள் :  லதா ரஜினிகாந்த் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை:  A .R ரஹ்மான்  



காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது



வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில்
பார்த்திட செய்வேன்

மழை நாளில் உன் மார்பில்
கம்பளி ஆவேன்
மாலை காற்றை தலை கோதி
நித்திரை தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

உனது உயிரை எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்

கால மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில்
புதுமை செய்வேன்

அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன் உன்
ஆண்மை நிறையும் போது உந்தன்
தாய் போல் இருப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக