பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 28 மார்ச், 2014

மெமரியில் இருக்கும் ஃபைல்களின் இடத்தை நெருக்கிட ..

நாம கம்ப்யூட்டர்ல வேலை செய்ய செய்ய ப்ரோக்ராம் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்ய செய்ய நினைவகத்துல (மெமரி) இடம் குறைஞ்சுகிட்டே வரும்..

சில நேரம் ஃபைல்கள் கண்ணா பின்னானு இடத்தை அடச்சிருக்கும் ,இதுக்கு நாம அப்போ அப்போ நம்ம கம்ப்யூட்டரின் மெமரியில் இருக்கும் தேவை இல்லாத இடத்தை காலி பண்ணனும்,.

Defragment - மெமரியில் இருக்கும் ஃபைல்களை Re-arrange,ஃபைல்களுக்கு இடையில இருக்குற இடைவெளியை  கம்மிபண்ணி நெருக்கத்தை  ஏற்படுத்தணும் இதுக்கு பேர் தான் Defragment (டீஃராக்மென்ட் )

இத எப்படி செய்யணும்னா ,

1. Start - > Programs - > Accessories - > System Tools -> Disk Defragmenter செலக்ட் பண்ணுங்க..


2. இப்போ ஒரு விண்டோ ஓபன் ஆகும் ..அதுல எல்லா டிரைவ்களும் தெரியும் .அதுல நமக்கு எந்த டிரைவ்யை டீஃராக்மென்ட் பண்ணணுமோ அதை செலக்ட் செஞ்சு Defragment பட்டனை கிளிக் பண்ணுங்க ..இப்போ இது ஃபைல்களை நெருங்கி அமைச்சு இவ்வளவு இடம் காலியா இருக்குனு காட்டும்..
3. இதுதான் பொதுவான முறை..ஆனா இதை நாம ஒரு ஒரு தரமும் Start - > Programs - > Accessories - > ...னு போகணும் ,டிரைவ் செலக்ட் பண்ணும் முடியுற வரைக்கும் வெயிட் பண்ணனும்..

இது தானா இந்த வேலையை செஞ்சா எப்படி இருக்கும்?அதுக்கு ஒரு வழி இருக்கு..அது எப்படின்னு  இப்போ பாப்போம்...

1. Notepad ஓப்பன் பண்ணிக்கோங்க ( Start -> Run - >Notepad -னு டைப் பண்ணி ok கொடுங்க )

2. defrag.exe  C:  -F  -V  > "Message " -னு டைப் பண்ணும் ..இங்க "Messgae " அப்படீங்குறது ,டீஃராக்மென்ட் ஆனதுக்கு அப்பறம் நமக்கு தெரியவர எதாவது ஒரு மெசேஜ் (நாம குடுக்குறதுதான்)..

3. இப்போ ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ் டீஃராக்மென்ட்  பண்ணனும்னா மேல (step 2) குறிப்பிட்டு இருக்குற அந்த வரியை போலவே இன்னொரு வரி அதுல எந்த டிரைவ் வேணுமோ அதை குறிப்பிடனும் ..

உதாரணம் :

 defrag.exe  C:  -F  -V  > "Success "
 defrag.exe  D:  -F  -V  > "Success "

இப்படி டைப் செஞ்சுருக்கணும் ..இதுல C: அடுத்து ஒரு இடைவெளி (Space ) -F அடுத்து ஒரு இடைவெளி (Space )  -V அடுத்து ஒரு இடைவெளி (Space ) >அடுத்து ஒரு இடைவெளி (Space ) மெசேஜ் இப்படி இருக்கணும்

4. இப்போ இந்த notepad ஃபைல்லை 'Save As' -குடுத்து  ஃபைல் பெயரை .bat (batch File) எக்ஸ்டன்ஷன்ல save பண்ணிக்கோங்க .

உதாரணம் :  test.bat

5. அவ்ளோதான் இனி எப்போ நமக்கு Defragment பண்ணுமோ அப்போ இந்த ஃபைல்ல டபுள்  கிளிக் பண்ணினா போதும்..நமக்கு தேவையான டிரைவ் Defragment ஆகிடும்..

இத என்னால எங்க Save பண்ணிருக்கேன்னு தேடமுடியாதுனு சொல்றவங்க இதை டிராக் செஞ்சு ஸ்டார்ட் பட்டன்ல சேத்துக்கலாம்.

இதையும் செய்யமாட்டேன் ...இத விட எளிமையா தானாவே இந்த செயல் நடக்கனும்னு நினைக்குறவங்களுக்கு இருக்கவே இருக்கு 'Schedule Task ' ஆப்ஷன் .


1. Start - > Programs - > Accessories - > System Tools -> Schedule Task போங்க ..அதுல Add Schedule Task குடுத்து அதுல இப்போ Save செஞ்ச .bat ஃபைல் செலக்ட் பண்ணுங்க ,எந்த நேரத்துக்கு Defragment ஆகணுமோ அந்த நேரத்தையும் கொடுங்க ..அவ்ளோதான்..இனி தானா இந்த வேல நடக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக