பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 4 ஜூலை, 2025

ரிவியூ பண்றவங்களே உங்ககிட்ட இருக்குற சக்தியை நல்லதுக்கு மட்டும். யூஸ் பண்ணுங்க.

சமீபத்துல வெளிவந்த தக்  லைஃப் -படம் வெளிவந்ததும் பலவிதமான விமர்சனங்கள் . என்ன என்னவோ சொன்னாங்க.

மணிரத்னம் படமா இது .கமலும் சிம்புவும் த்ரிஷாவுக்காக அடிச்சுக்குறாங்க .த்ரிஷாவோட ஒரு டயலாக் "நான் ஒரு அழுக்கு பிண்டம் , நா வேணாம் உங்களுக்கு" - இந்த டயலாக் வச்சு அவ்ளோ மீம்ஸ் .இப்படி படத்தை பத்தி நெகடிவ் -ஆ சொல்லி சொல்லி சொல்லி அந்த படத்தை பத்தி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவச்சிருந்தாங்க.

எப்படி இருந்தாலும் அந்த படத்தை பாக்கணும்னு முடிவு பண்ணி பாத்தோம் . அட பாவிங்களா உங்களுக்கு ஏன்யா இவ்ளோ காண்டு .. யாரை அழிக்கணும்னு முடிவு பண்ணி இத செஞ்சீங்கன்னு தெரியல .

படம் இவங்க எல்லாம் ரிவியூ பண்ணதுக்கு சம்மந்தமே இல்ல . படம் நால்லாத்தான் எடுத்துருந்தாங்க , நடிச்சிருந்தாங்க . ஒரே ஒரு விஷயம் தான் எனக்கு தோணுச்சு. கிராபிக்ஸ் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்னு தோணிச்சு.

இந்த படத்துல யாரும் திரிஷாவுக்காகலாம் சண்டைபோட்டுக்கல. ஒரு கேங்ஸ்டர்ஸ்க்குள்ல சின்ன சந்தேகம் வந்தாலும் அது எப்படி மாறும், யாரு யாரை அழிச்சு அந்த டாப் இடத்துல இருக்கணும்னு நினைபாங்கனு தான் படத்துல காட்டிருக்காங்க.

ஆனா review பண்ற மக்களே உங்களுக்கு ஏன் இந்த காண்டு , ஏன் இப்படி படத்தை பத்தி மோசமா கழுவி ஊத்தினீங்கன்னு தான் இப்போ வரைக்கும் புரியல. நெஜமாவே படம் பாத்துதான் ரிவியூ பண்ணினாங்களா இல்ல ஒருத்தர் சொன்னதை வச்சு கேட்டு கேட்டு ரிவியூ பண்ணினாங்களானு தெரில.ஆனா ஒன்னு நீங்க நினச்சா யாரையும் அழிச்சிட முடியும் .. 

இது ஒரு பெரிய பொறுப்பு , பெரிய ஷக்தி உங்ககிட்ட இருக்கு .நல்லதுக்கு மட்டும் யூஸ் பண்ணுங்க .



சனி, 24 மே, 2025

நாம ஒன்னும் முட்டாளுங்க இல்ல

சமீபத்துல எனக வீட்ல ஒரு conversation நடந்தது.இந்தியன் ஸ்கூல் எல்லாம் ரொம்ப மோசம் , அமெரிக்கன் ஸ்கூல் எல்லாம் செம்ம அப்படீன்னு .

என்னால இத ஏத்துக்கவே முடியல .ஆமா அமெரிக்கன் ஸ்கூல் -ல நம்ம நாட்டு ஸ்கூல் மாதிரி அதிகமான சுமையை குடுக்கமாட்டாங்க .அதிகமா எழுதுறதை குடுக்கமாட்டாங்க .கையெழுத்து பத்தி கவலை படமாட்டாங்க .பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கணும்னு சொல்லமாட்டாங்க . Theraritical -ஆ மட்டும் இல்லாம practical -ஆ ரொம்ப அழகா பழக்குவாங்க.பிள்ளைங்களுக்கு  எது பிடிக்குது எது பிடிக்கலைனு எதுல அதிகமா ஆர்வமா இருக்காங்கனு ஸ்கூல்-ளையும் பாப்பாங்க.அங்க வீட்லயும் அப்பா அம்மாவும் பாப்பாங்க.அதுக்கு தகுந்த மாதிரி அவங்கள அவங்களுக்கு பிடிச்சதை படிக்க வைப்பாங்க .நம்மள மாதிரி நீ படிச்சே ஆகணும் டாக்டர் ஆகியே தீரணும், இல்ல கவுரவக்குறைச்சல் , அசிங்கமாகிடும் இதுலாம் இல்ல ..ஒத்துக்குறேன்.அதுக்காக இந்த நாட்டுல படிச்சவங்க ஆஹா ஓகோனு இருக்காங்கனு சொல்லமுடியுமா?

நம்ம நாட்டுல இருந்து இந்த நாட்டுக்கு வந்து வேல செய்யுறவங்க எவ்வளவு பேர் இருக்காங்க .நம்ம நாட்டுடைய education சிஸ்டம் சூப்பர்னு ஒரு நாளும் நா சொல்லமாட்டேன்  இப்போவரைக்கும் ,அதுக்காக அங்க படிச்சாங்களாம் முட்டாளுங்க இல்ல , புக் தவிர வேற எதுவும் செய்யத்தெரியாதவங்க இல்ல ,அத தாண்டி யோசிக்க தெரியாதவங்க இல்ல . அப்டி எல்லாம் இருந்தா நம்மாளுங்கஎப்படி  இங்க இருக்குற பெரிய கம்பெனி எல்லாத்துலயும் டாப் இடத்துல இருப்பாங்க.எத்தனை டாக்டர்ஸ் எத்தனை சாப்ட்வேர் டெவெலப்பர்ஸ் நம்ம நாட்டுல இருந்து இந்த நாட்டுல வேல செய்யுறாங்க .வட்டத்தை தாண்டி யோசிக்க தெரியாதவங்கனா எப்படி இங்க வந்து வேல செய்வாங்க?

நம்முடைய நாட்டுல கல்வி காசாகிடுச்சு . எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்குறது இல்ல . அதுக்காக அங்க படிக்குற , படிச்ச, நாமெல்லாம் முட்டாள்கள் இல்ல.

நம்ம நாட்டுல இன்னோர் பிரச்சனை என்ன தெரியுமா , ஒரு குழந்தை நல்லா படிக்குதுனு தெரிஞ்சா அந்த குழந்தையை இன்னும் கொஞ்சம் அதிகமா மெனக்கெட்டு இன்னும் நல்லா படிக்க ட்ரைனிங் தருவாங்க. அந்த குழந்தை நல்ல மார்க் எடுத்தா நம்ம ஸ்கூலுக்கு பெருமைனு போட்டி போடுவாங்க அந்த குழந்தையை படிக்க வைக்க.

ஆனா இங்க அமெரிக்காவுல ஸ்பெஷல் குழந்தைகளுக்குதான் முதல் முக்கியத்துவம் குடுத்து அவங்கள இன்னும் ஸ்பெஷல்ஆ ட்ரீட் பண்ணி அந்த குழந்தைபோக்குலயே போகவிட்டு படிக்க வைப்பாங்க .அப்படிதான் ஆட்டிசம் குழந்தைங்களுக்கு அவ்ளோ அழகா கல்வி கொடுக்குறாங்க.நம்ம நாட்டுல அவ்ளோதான் அந்த குழந்தை ஸ்பெஷல் குழந்தை அந்த குழந்தைக்கு கல்வி வராதுனு முடிவு பண்ணிடுவாங்க.

இவ்ளோ நல்லா education  சிஸ்டம் இருக்குற இந்த நாட்டுல படிச்ச எல்லாரும் செய்மையான பொஷிஷன்-ல இருக்காங்களா என்ன?

இனக்ளுக்கு தானே நம்ம நாட்டுல கால் சென்டர்-னு ஒன்னு வச்சு இவங்களுக்கு வேணுங்குற உதவிகளை தானே செய்றாங்க .எத்தனை பேருக்கு செக் fill பண்ண தெரியாம customer care -க்கு கால் பண்ணி கேப்பாங்க, எத்தனை பேர் வாஷிங் மெஷின்ல இத எப்படி operate -பண்றதுனு கேப்பாங்க .எத்தனை பேர் இந்த ஸ்வீப்பர் எப்படி remove பண்ணி clean பண்றதுனு கேப்பாங்க.அட இவ்ளோ எதுக்கு ,  நானும் இங்க இந்த நாட்டுல இந்த நாட்டுகாரங்களோட வேலை செஞ்சுருக்கேன்.அஞ்சு வருஷம் பத்துவருஷமா வேல செய்யுறேன்னு சொல்லுவாங்க ,ஒரு Team -ல இன்னோர் பேரை எப்படி சேக்குறதுனு கூட தெரியாது. இத பண்ணுங்க இத கிளிக் பண்ணுங்கன்னு சொன்னா  கூட தெரியாது. அப்டித்தான் வேல செய்யுறாங்க. ஏன்னா இவங்க தான் அந்த வட்டத்தை தாண்டி யோசிக்கமாட்டாங்க .தனக்கு குடுத்த வேலை மட்டும்தான் பாப்பாங்க .50 பேர் வேல செஞ்சா அதுல 45 பேர் இப்படி தான் இருக்குப்பாங்க.செம சூப்பர்-ஆ வேல செய்யுறவங்களும் இருக்காங்க .அந்த சதவிகிதம் குறைவுன்னு தான் நான் சொல்றேன்.

yes , நம்ம நாட்டுல கல்வியும் கால் சம்மந்தமான விஷயங்களை improve பண்ணனும் நிறையவே , improve பண்ணனும் .எல்லாரும் நல்ல கல்வி கிடைக்க செய்யணும் .உலகத்துக்கே நாம எடுத்துக்காட்டா இருக்கலாம் அப்படியெல்லாம் செஞ்சா. நம்ம குழந்தைங்க உலககத்துல எல்லா நாட்டுலையும் எல்லா பெரிய பொசிஷன்லயும் இருப்பாங்க.

மனக்குமுறல் தான் இதுலாம் .

சனி, 14 செப்டம்பர், 2024

பாடலின் வரிகள் - நெஞ்சமே நெஞ்சமே , மாமன்னன்

படம் : மாமன்னன் (2023)
பாடியவர்கள்  : விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் 
பாடல் எழுதியவர் : யுகபாரதி
இசை : A.R.ரகுமான்




நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ... ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


கண்ணோரம்
கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே
பாடல் நீ..யே.. ஓஓ ஓஓ ஓ...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ... என்னிலே
வண்ணமாய்... பொங்குதே
ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..


நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததால்
திக்கெல்லாம் வெள்ளிமீனே
நீ... தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லைத் தேனே


ஓ ஓ ஓ ஓ செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
தித்திப்பு முத்தமே கொஞ்சம் தாயேன்


செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டிப்போயேன்..
காட்டுக்கே கூட்டிப்போயேன்


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


கமல் ஹாசன் எனும் ஒரு யூனிவர்சிட்டி

 ஓவியா ஜூலி கலந்துக்கிட்ட பிக் பாஸ் பாத்ததோட சரி , அதுக்கு அப்பறம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் பாத்தது இல்ல . 

சமீபத்துல கமல் சார் பிபி பாஸ் நிகழ்ச்சியில இருந்து பிரேக் எடுக்க போறதா நியூஸ் பாத்தேன் . என்னடா இது இப்படி ஆகிடுச்சே எதுக்காக இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலனு பாத்தா மனுஷன் AI டெக்னாலஜி பத்தி 4 மாசம் கோர்ஸ் படிக்க அமெரிக்கா போகுறாராமே .

இவரால இந்த வயசுலயும் எப்படி இவ்ளோ ஆர்வமா எதாவது ஒன்னு படிக்க இல்ல கத்துக்க முடியுது ?

உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியல , நமக்கு Confrence Call-னா என்னனு பஞ்சதந்திரம் படத்தின் மூலமா நமக்கு அறிமுகம் செஞ்சுவெச்சது கமல் சார் தான். 

Bluetooth headphone -னுங்குற கான்செப்ட்-ஐ நமக்கு வசூல் ராஜா MBBS படத்தின் மூலமா அறிமுகம் செஞ்சுவெச்சது கமல் சார் தான் .



விக்ரம் (1986):
சைபர் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்த த்ரில்லர் கதை.

அபூர்வ சகோதரர்கள் (1989)
Motion Control Camera:
கமல் ஹாசன் மூன்று வேடங்களில் நடித்தார், இதில் மெர்கல் ஷாட் பயன்படுத்தப்பட்டது. இது காட்சிகளில் மூன்று வேடங்களில் உள்ள கமலை ஒரே காட்சியில் இணைத்து காட்ட உதவியது.

காமெரா டிரிக்குகள் (Camera Tricks):
மூன்று கதாபாத்திரங்களை ஒரே காட்சியில் இணைக்கும் தொழில்நுட்பம்.

தேவர்மகன் (1992)
எக்ஸ்ட்ரீம் ஸ்லோ மோஷன் (Extreme Slow Motion):
சண்டைக் காட்சிகளில் ஸ்லோ மோஷன் பயன்படுத்தி காட்சியை மேலும் விவரமாகத் தரம் உயர்த்தியது.

குருதிப்புனல் (1995)
முதல் டிஜிட்டல் ஒலி:
இந்த திரைப்படத்தில் முழுமையான டிஜிட்டல் ஒலித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இந்தியன் (1996)
ரூ 100 கோடி கிளப்:
ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம்.

ஹே ராம் (2000)
Polaroid Production:
கதாபாத்திரங்களின் நுணுக்கமான நடிப்புகளை படம்பிடிக்க உதவியது.

ஆளவந்தான் (2001)
ஆனிமேட்ரானிக்ஸ் (Animatronics):
சண்டைக் காட்சிகளுக்கு அதிக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காமிக்ஸ் அனிமேஷனை காட்சிப்படுத்தினர்.

ஸ்டடி-கேம் (Steadicam):
ஸ்டேபிளான (நிலையான) காட்சிகளை உருவாக்க ஸ்டடி-கேம் பயன்படுத்தப்பட்டது.

மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
ஏரோமோபில் கேமரா (Aeromobile Camera):
வானில் இருந்து காட்சிகளை பிடிக்க பயன்படுத்தப்பட்டது.

தசாவதாரம் (2008)
புதிய மேக்கப் தொழில்நுட்பம்:
கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்தார், இவ்வேடங்களில் தனித்துவமான தோற்றத்தை பெற மேக்கப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. Prosthetic makeup

மோஷன் கேப்ச்சர் (Motion Capture):
வேடங்களில் அசைவுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்த இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

உன்னைப் போல ஒருவன் (Unnai Pol Oruvan) (2009)
Auro 3D Sound:
இந்த படத்தில் பயன்படுத்திய முதன்மையான 3D சவுண்ட் தொழில்நுட்பம்.

விஸ்வரூபம் (2013)
முதல் டிஜிட்டல் படம்:
இந்திய திரையுலகில் முழுமையான டிஜிட்டல் திரைப்படமாக இதைப் பயன்படுத்தினார்.

விஎஃபெக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்:
போர்க்கள காட்சிகள் மற்றும் நகரத்தின் சிதைவுகளை விஎஃபெக்ட்ஸ் (VFX) மூலம் வடிவமைக்கப்பட்டது.

இந்த படத்துக்காக ஒரு பெரிய நடன ஜாம்பவான் கிட்ட சில மாசம் நடனம் கத்துக்கிட்டார்  உன்னை காணாத-ங்குற  அந்த ஒரு பாடலுக்காக .

விஸ்வரூபம் 2 
முதல் முழுமையான ஸ்டீரியோஸ்கோபிக் திரைப்படம் (Stereoscopic Film).
'விஸ்வரூபம் 2' திரைப்படம் இந்திய சினிமாவில் முழுமையான ஸ்டீரியோஸ்கோபிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் படமாகும். 
இது 3D அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பமாகவும், பார்வையாளர்களுக்கு மிக நெருங்கிய மற்றும் ஆழமான காட்சிகளை உணர்விக்க உதவியது.

விக்ரம் (2022):
சினிமா நேரலை (Live Streaming Cinema) – முதன்முறையாக பட ரீலீஸ் நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினர்.


தான் செய்யும் தொழில் மேல அதீத மரியாதை , காதல் , அர்ப்பணிப்பு இருக்கு ஒருத்தராலதான் இப்படி புது புது முயற்சிகளை எடுக்கவோ அறிமுகப்படுத்தவோ முடியும் .

இவரை ஒரு யூனிவர்சிட்டி-னு சொல்றதுல தப்பே இல்ல .

இவருடைய எத்தனையோ படங்கள் வசூல் ரீதியா சரி போகல , ஆனாலும் அவர் தன்னுடைய முயற்சியை விடல இப்போ வரைக்கும் .

ஆனா காலத்துக்கும் நிலைக்க போறது இவருடைய படங்களே.

இவருடைய பிள்ளைகளுடைய பேட்டி சமீபத்தில் பாத்தேன் . அந்த பிள்ளைங்ககிட்ட எவ்ளோ தெளிவு .
எங்களுடைய செலவை நாங்கதான் பாத்துக்கணும் . வீட்டுக்கு ரெண்ட் தரவேண்டாமா? இவ்ளோ வேலை செய்றேன் , இங்க வேலை செய்றேன்-னு எவ்ளோ ஒரு maturity .எங்களுக்கு என்ன சேது வச்ச என்ன கொடுத்தனு இல்லமா எங்களை நாங்களே பாத்துக்குறோம்னு இருக்குறதுக்கு ஒரு பெரிய பக்குவம் வேணும்.

இவர் நினைச்சிருந்தா பல பல கோடிகளை சேர்த்திருக்கலாம் .ஆனா வர பணத்தை மறுபடியும் படம் எடுக்குறதுலே செலவு பண்றார் .

பெத்த பிள்ளைங்களுக்கு மட்டும் இல்ல பேரப் பிள்ளைங்களுக்கு அதையும் தான்டி கொள்ளு பேரப்பிள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வைக்குறவங்க மத்தியில இப்படி ஒரு மனுஷன்.


வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

I Love you -க்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சி தருணம்

 நான் அமெரிக்கால பார்ட் டயம்ல லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சேன் . அதான் நம்ம ஊருல ஊபர் டிரைவர் மாதிரி. இங்கயும் ஊபர் இருக்கு , ஆனா அது போலவே மத்த கம்பெனிகளும் இருக்கு.

நான்  லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சப்போ நிறைய புது புது அனுபவங்கள் கிடைச்சது.அதுல ஒன்னு கொஞ்சம் பயம், காமெடி கலந்த ஒரு அனுபவம் அதைத்தான் இப்போ ஷேர் பண்ணப்போறேன்.

ஒரு நாள் ஒரு லிஃப்ட் ரெக்குஸ்ட் accept பண்ணினேன். அது ஒரு மோட்டல் . பொதுவா இங்க அமெரிக்கால அதிகம் சம்பாதிக்காதவங்க , கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு பக்கத்துல அல்லது கீழ இருக்குறவங்க ஒரு வீடு வாடகை எடுக்குறதுக்கு பதிலா இதுமாதிரி மோட்டல்கள்ல  தங்குவாங்க. மாசா மாசம் ரெண்ட் கொடுத்துடனும் . அந்த சின்ன இடத்துலயே ஸ்டவ் வச்சு சமைப்பாங்க வேற. அதுமாதிரி ஒரு மோட்டல்ல ஒருத்தரை பிக்கப் பண்ண நா போனேன். அவரு போய் சேர வேண்டிய இடம் 25 நிமிஷ தொலைவுல இருந்தது.  வண்டில ஏறினதும் கண்டுப்பிச்சுட்டேன் அவரு கொஞ்சம் குடுச்சிருக்காருனு . மோட்டல்ல விட்டு வெளில வரதுக்கு முன்னாடியே கொஞ்சம் நிறுத்து நிறுத்து நான்  பர்ஸ் மறந்துட்டேனு சொல்லி இறங்கி ஓடி எடுத்துட்டு வந்தாரு.

அங்க இருந்து நான் highway -க்கு போகணும் .அதுக்கு நான் ரைட் எடுக்கணும்.ரைட் எடுக்கும்போது வேற யாராவது எதிர்புறம் வராங்களானு செக் பண்ணிட்டு போகணும். நானும் அப்டித்தான் செக் பண்ணினேன். அந்த நின்ன சில வினாடி அவரால வெயிட் பண்ணமுடியல .போலாம் போலாம் நீ போ னு சொன்னாரு. நான் பொதுவா கேட்கமாட்டேன் .கண்டுக்க மாட்டேன். ஏன்னா எனக்கு என் safety, என்ன நம்பி  வண்டி ஏறுறவங்களோட safety ,என்னோட கார்-ஓட safety எல்லாமே முக்கியம்.

அதனால நா சில வினாடி வெயிட் பண்ணிட்டுதான் எடுத்துட்டேன். உடனே பின்னாடி இருந்து அவரு உச்சு கொட்டி தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்தினார். நான் கண்டுக்கல.  highway-ல போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு மாதிரி பரபரப்பாவே உக்காந்துட்டு இருந்தார். highway -ல இருந்து அவரு வேல செய்ற இடத்துக்கு ரெண்டு மூணு சிக்னல் தாண்ட வேண்டி இருந்தது . ஒரு சிக்னல்-ல ஆரஞ்சு இருக்கும் போது நான் ஸ்டாப் பண்ண ரெடி ஆனேன் ஆனா அவர் பின்னாடி உக்காந்து போய்டு போய்டு-னு சொன்னார். நான் தான் சொன்னேனே கேட்கமாட்டேன்னு , நா போகல. நின்னுட்டேன் .ரெட் விழுந்துடுச்சு.  மறுபடியும் அவருக்கு அதிருப்தி . நான் தான் சொன்னேனே போகலாம்னு, போயிருக்கலாம்னு கொஞ்சம் எரிச்சலோட சொன்னார். நான்  பதில் சொல்லல.

அவர் ஒரு இண்டஸ்ட்ரி-ல வேல செய்றவர் போல. அதுக்குள்ள போக left, right -னு ரெண்டு சைடு இருக்கு . நான் left எடுத்துட்டேன் . சரி போ போ-னு சொன்னார். உள்ளபோயி gate  கிட்ட நிறுத்திட்டேன். அவர் கார் விட்டு முழுசா இறங்கல . ஒரு கால் உள்ள ஒரு கால் வெளில இருக்கு . அவர் என்ன பாத்து 'hey thanks . you did  a good job. I love you ' அப்டினு சொன்னாரு. 

அவ்ளோதான் எனக்கு வௌ வெளுத்து போச்சு. விவேக் காமெடி -ல சொல்றமாதிரி I love you-சொன்னா அப்பன் அருவாளோட வருவாரு-னு  , வளந்த புள்ள . I love you -ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்லணும் அல்லது ஒரு  காதலி காதலன்கிட்ட சொல்லணும் அவ்ளோதான்.இப்படி சினிமா பாத்து கேட்டு வளந்த  புள்ள தான் நானு. என்னபாத்து இவரு இப்படி சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. 

நா அப்டியீ பாக்குறேன் அவரை. அவரு போகமாட்றாரு . hey , i  said  I love you-னு வேற சொல்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு அப்பவும் தெரியல . ஆனா அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பனும்னு மட்டும் நினைக்குறேன். இந்த மனுஷன் இறங்கவும் மாட்டறாரே கார் விட்டு. என்ன பண்றதுனு அவரையே பாக்குறேன்.என்னையும் அறியாம love you too -னு சொல்லி மண்டைய ஆட்டுறேன்  பயத்துல. அப்பறம் தான் அவரு இறங்குறாரு. கைப்புள்ள எடுடா வண்டிய-னு reverse -லயே போய் வண்டிய திருப்பிக்கிட்டு அந்த இண்டஸ்ட்ரி -தாண்டினதுக்கு அப்பறம் தான் ரிலாக்ஸ் ஆகி ஒரு ஓரமா நிறுத்தி என்ன நடந்ததுன்னு யோசிச்சேன்.

என்னது love you too -னு சொன்னியா அவன்கிட்ட . அறிவிருக்கா. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இப்படி நீ அவன்கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கனு என்ன திட்டுறேன். first வீட்டுக்கு போவோம்னு வண்டியை எடுத்துகிட்டு கிளம்பியிட்டேன். offline -போய்ட்டேன் ,so எனக்கு எந்த வண்டி request -ம் வராது.

வழியெல்லாம் இதே மண்டையில ஓடிக்கிட்டு இருக்கு . இப்படி சொல்லிட்டானே பாவி . அதுக்கு நீ பதிலுக்கு இப்படி சொல்லிட்டியே படுபாவினு திட்டிக்கிட்டே வரேன்.

அப்பறம் தான் எனக்கு புரிஞ்சது , நாம நினைக்குற லவ் வேற அவரு சொன்ன லவ் வேற. என் மேல கடுப்பு அடிச்சுக்கிட்டே வந்தாரே அதுக்கு சாரி சொல்லாம அந்த மனுஷன் இப்படி சொல்லிருக்காருனு எனக்கு புரிஞ்சது. அது இந்த நாட்டுல சகஜம் . யாரு யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம். அது அன்ப சொல்ற விதம் அவ்ளோதான். இளம் வயசுல சொல்ற காதல் இல்ல . அட லூசு பயலே இப்படியா என்ன பயமுறுத்துவனு சொல்லிக்கிட்டு , அட லூசு இப்படியா நீ பயப்படுவ -னு என்ன நானே திட்டிக்கிட்டு வந்தேன். உடனே என் புருஷனுக்கு கால் பண்ணி நடந்ததை சொல்லி  ரெண்டுபேரும் சிருச்சுக்கிட்டு இருந்தோம். அப்பறம் மறுபடியும் online -போயிட்டு வேலைய தொடர்தேன் . 

இப்படி நிறைய சுவாரசியமான அனுபவங்கள் இருக்கு அந்த வேலையில .



















செவ்வாய், 5 செப்டம்பர், 2023

எங்க இருந்தாலும் நாம அப்டியே இருந்தா எப்படி ?

     சமீபத்துல அமெரிக்கால இருக்குற ஒரு இந்து கோவிலுக்கு போயிருந்தோம். அந்த கோவில்ல குழந்தைகள் விளையாடுறதுக்கு சின்ன பழைய ஏரியா (பார்க் மாதிரின்னு வச்சுக்கோங்களேன் ) இருக்கு. அந்த கோவில் ரொம்ப சுத்தமா இருந்தது. கோவில் சுற்றுப்புறமும் சுத்தமாத்தான் இருந்தது.ஆனா அந்த குழந்தைகள் விளையாடுற பார்க்ல பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் தட்டு, தண்ணி பாட்டில் இதுலாம் கிடந்தது.ஹிந்து கோவிலுக்கு நம்ம இந்தியர்களை தவிர யாரு வரப்போறாங்க?

    இந்த நாட்டுல இருக்குற பார்க்குகள்ல பாத்தோம்னா அவ்ளோ சுத்தமா இருக்கும்.நீங்க எங்கப்பாதாலும் குப்பைகளை பாக்க முடியாது. 98% சுத்தமா தான் இருக்கும் எல்லா இடங்களும் முக்கியமா  இந்த மாதிரி பார்க்குகள். இந்த நாட்டுல நான் பாத்து ரொம்ப ஆச்சர்யப்பட்ட விஷயம் இது. எவ்ளோ கோட்டம் இருந்தாலும் எவ்ளோ குலாண்டகிகள் ஒன்னு கூடினாலும் அங்க நாம கீழ குப்பைகளை பாக்க முடியாது. அது ரூல்ஸ் -ஆள இப்படி பழகிருக்கங்களா இல்ல இயற்கையாவே இப்படி  இருக்காங்களான்னு தெரியல. தன் வீடு எப்படி இருக்குமோ தெரியாது ஆனா பொது இடம் சுத்தமா இருக்கும்.

     ஆனா நம்ம கோவில்ல இந்த பார்க்குல அவ்ளோ குப்பைகள் இருந்தது.இத்தனைக்கும் பக்கத்துல ஒரு குப்பை தூட்டி இருந்தது ஒரு 50 ஆதி தள்ளி ஒரு குப்பை தொட்டி இருந்தது. நமக்கு பழக்கம் வரமாட்டுதோனு நினைக்க தோணிச்சு. போன தலைமுறை எப்படி இருந்தாங்களோ போகட்டும் . இந்த தலைமுறை சரியா இருந்தாத்தானே அடுத்த தலைமுறைக்கு நாம அத சரியா கொண்டுபோகமுடியும்.நாமே இப்படி அலட்சியத்தால இருந்தோம்னா நம்ம பாத்து வளருற நம்ம குழந்தைகள் எப்படி சரியா வளருவாங்க? 

    அங்க இன்னொரு விஷயமும் நடந்தது, பிள்ளைகள் ஒரு வளைவுல ஏறி போயி ஸ்லைடு-ல(சறுக்குமரம்) விளையாடுவாங்க . ஒரு பொண்ணு அந்த வளைவுல ஏறிகிட்டு இருந்தப்போ ஒரு பல்பு எங்கயோ இருந்து கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு. நல்ல வேல அது அந்த பொண்ணு தலையில விழல . பார்க்ல எப்பவும் கீழ மல்ச்-னு சொல்லப்படுற மர தூள் அல்லது துகள்களை போட்ருப்பாங்க. குழந்தைகள் விழுந்தா அடி  படாம இருக்க. இந்த பல்பு அதுல விழுந்து உடைஞ்சிடுச்சு. உடனே அந்த பொண்ணோட அம்மா பல்பு விழுந்துடுச்சு இந்த பக்கம் வா இறங்குனு அந்த பொண்ணை கூப்பிடுறாங்க. இன்னோர் அம்மா தன் பிள்ளையை அந்த பக்கம் போகாதனு சொல்றாங்க. ஆனா யாரும் அந்த உடைஞ்ச பல்ப்பை எடுக்க முன்வரல. அந்த கொஞ்சம் வளைந்த பொண்ணை விட சின்ன குழந்தைகள் அங்க விளையாடிகிட்டு இருந்தாங்க. இன்னும் எதனை குழந்தைகள் வந்து விளையாடுவாங்களோ? எப்படி நம்மால அதை பாத்து நம்மக்கு என்ன வந்ததுன்னு நினைக்கவோ இல்ல நம்ம பிள்ளை மட்டும் பத்திரமா இருந்தா போதும்னு நினைக்கவோ முடியுது? நானும் இன்னோர் gentle man -ம் சேர்ந்து அதை சுத்தம் பண்ணிட்டோம்.ஆண்களை இந்த விஷயத்துல ரொம்ப பாராட்டணும், அவங்க எப்பவும் கொஞ்சம் broad -ஆ தான் யோசிப்பாங்க.

இத நான் இப்போ ஒரு குறையா சொல்லல. நம்ம பாத்து வளருற குழந்தைகள். நாமதான் அவங்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரணும். நாமே இப்படி இருந்தா எப்படி. 


திங்கள், 31 ஜூலை, 2023

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்

    கொஞ்சநாளா சூப்பர் ஸ்டார் அப்படீங்குற பட்டத்தை பத்தி நிறைய பேச்சு போய்கிட்டே இருக்கு . ஆனா சந்தானம் சொல்ற மாதிரி , அந்த காலத்து கிழவி வாயும் இந்த யூடியூபும் ஒன்னு .யாரையாவது பத்தி பேசிக்கிட்டே தான் இருக்காங்க.அந்த காலத்துல பாவம் அந்த பாட்டிகளுக்கு பொழுது போக்கு இல்ல . ஊரு கதை பேசுறது மட்டும் தான் பொழுது போக்கா இருந்தது.இப்போதான் ஏக்கப்பட்ட பொழுதுபோக்கு விஷயம் இருக்கே .அதுலாம் பண்ணலாம் இல்ல .அது விட்டுட்டுட்டு அடுத்தவனை பத்தி பேசுறதே ஒரு பொழுதுபோக்கா வச்சிருந்தா என்ன பண்றது.

    அப்போ அது நடந்தது பாரு இப்போ இது நடந்தது பாரு ,அதுக்கு அது அர்த்தம் இதுக்கு இது அர்த்தம்-னு சிலபேர் கிசுகிசு சொல்லியே காசு சம்பாதிக்குறாங்க.பிரபலம் ஆகுறாங்க. சம்மந்தம் பட்டவங்க என்னவோ சும்மா தான் இருக்காங்க. ஆனா அவங்க செய்றாங்களோ இல்லையோ நீங்க நல்லா செய்றீங்கய்யா .காசுக்காக என்ன வேணும்னாலும் நீங்கதான் செய்வீங்க போல.

    ஆனானப்பட்ட ஜாக்கி ஜானும் , டாம் க்ரூஸும் கூட பேருக்கு முன்னாடி பட்டப் பேர் வச்சுக்க ஆசைப்படல இப்போவாரைக்கும். ரஜினி சார் தான் சொல்றாரே , எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன் , கேக்க மாட்றாங்கனு .நம்மள மாதிரி ஆளுங்க ரசிகர் அப்படீங்குற பேர்ல பண்ற டார்ச்சர் தான். அவர அப்டியே கூப்பிட்டு பழகிட்டோம் . அவரு அப்டியே இருக்கட்டுமே. அது ஏன் அடுத்த .. அப்டீன்னு சண்டைபோடனும். 

    விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம்,சிம்பு,தனுஷ்,சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதினு இவங்க எல்லாருக்கும் முன்னாடி வந்தவரு ரஜினி சார். இவங்க எல்லார்கிட்டயும் இல்லாத நடிப்பு அவர்கிட்ட இருக்குதோ இல்லையோ ஆனா ஸ்டைல் இருக்கு.இந்த வயசுலயும். அந்த ஸ்டைலுக்காக கொடுத்த பட்டம் தான் அது. அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும். வேற எந்த நடிகர்களும் நான் தான் அடுத்துனு சொல்லிகல .ஏன்னா இந்த எல்லாருமே அவருடைய ரசிகர்களா தான் இருந்துருப்பாங்க.இன்னமும் இருப்பாங்க.ஏன்னா அவர ,கமல் சார்-ஐ-லாம் பாத்துதான் வளந்துருப்பாங்க.நடிக்க வரணும்னு ஆசைப்பட்டுருப்பாங்க. அவர் மாதிரி பேரும் புகழும் ரசிகர்களோடு ஆதரவும் ஆர்பரிப்பும் தனக்கும்  இருக்கணும்னு நினைப்பாங்கதான் . நாம அந்த இடத்துல இருந்தாலும் அப்டித்தான் நினைப்போம்.அது மனிதனுடைய இயல்பு.இயற்கை . ஆனா எனக்கு அந்த பட்டம் குடுங்கனு அவங்க கேக்கல. ஆனா அவங்க பேர் சொல்லி ஜால்றா போடுற சிலபேர் பத்த வைக்குறது, அது தீயா , இந்த காலத்து ஆயாக்கள் வாயில விழுந்து வேற மாதிரி மத்தவங்க காதுகளுக்கு வந்துகிட்டு இருக்கு.

    ஒரே  ஐயின்ஸ்ட்டின் தான்,ஒரே எடிசன் தான் ,சரி ஏன் அவ்ளோதூரம் போகணும்?  ஒரே  அறிஞர் அண்ணா அவர்கள் தான்,ஒரே கர்மவீரர்  காமராஜர் அவர்கள் தான்,ஒரே கலைஞர்  கருணாநிதி அய்யா தான் ,ஒரே புரட்சித் தலைவி  ஜெயலலிதா அம்மா தான், ஒரே நடிகர் திலகம்  சிவாஜி சார் தான், ஒரே புரட்சித் தலைவர் MGR அவர்கள் தான், ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி சார் தான் . நமக்கு வேணும்னா நமக்கு பிடிச்ச மத்த நடிகர்களுக்கு வேற வேற பட்டப் பெயர் வச்சுப்போம். மத்தவங்களுடையது வேண்டாம்.

    அவருக்கு இருக்குற ஆயிரம் பிரச்சனைல இவங்க வேற எதையாவது சொல்லி அவரை கொடஞ்சுக்கிட்டே இருக்குறது எப்ப பாத்தாலும்.. இந்த மாதிரி பிரச்சனை-லாம் வேணாம்னுதான் அவரு இமயமலைக்கு கிளம்பிடுறாரு.



    சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் அட்வைஸ் "குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்துருப்பேன் "-னு சொல்லி குடிக்காதீங்கடானு சொன்னீங்களே சார் , இது.. இது..இதுமாதிரி தான் சார் எதிர் பாக்குறோம். நீங்க சிகரெட் பிடிக்கிற ஸ்டைல் பாத்து சிகரெட் பிடிச்சவங்க அல்லது பிடிக்க ஆரம்பிச்சவங்க எவ்ளோபேர் இருந்திருப்பாங்க. அவங்க உடலும் வீணாக்கிருக்கும்.அவங்களுக்கு இப்போகூட நீங்க அட்வைஸ் சொல்ல முடியும். ஏன்னா நீங்க உணருறீங்க இப்போ ,அது உங்க உடல் நலனை கெடுத்துருச்சுனு. உணருறதுதானே வாழ்க்கை.

     இதுமாதிரி உங்கள follow பண்ற கோடிக்கணக்கான பேர், முக்கியமா இந்த இளைஞர்-களுக்கு வாழ்க்கைல முன்னுக்கு வர அட்வைஸ் பண்ணுங்க. சும்மா நடிகர்கள் பேர் வச்சு கண்ட சண்டை போடாதீங்கன்னு அட்வைஸ் பண்ணுங்க. வாழ்க்கைல செய்யவேண்டிய முக்கியமான விஷயங்கள்  இருக்குனு சொல்லுங்க.ஏன்னா உங்க ஒரு வார்த்தைக்கு எப்பவுமே மரியாதை அதிகம்.


உன் அலும்ப பார்த்தவன்..

உங்க அப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
 
பேர தூக்க நாலும் பேரு..
அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..
 
டைகர்கா ஹுக்கும்...
 


LOVE YOU ALWAYS   💖💖💖