பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.

பொதுத்தளங்கள்

அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .

www.waytosuccess.com

www.padasalai.net

www.Kalvisolai.com

தமிழ்

www.tamilpalli.wordpress.com

www.tamilasiriyarthanjavur.blogspot.com

www.ttkazhagam.com

இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.

Maths

www.tnkanitham.in

இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.

Science

www.tnteachers.com

இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.

                         ---நன்றி ஹிந்து நாளிதழ் 

வியாழன், 26 பிப்ரவரி, 2015

பௌர்ணமியும் அமாவாசையும்..


நிலா பூமியைச் சுத்தி வருதுன்னு நமக்கு தெரியும். அப்படி ஒருமுறை சுத்தி வர இருபத்தி ஒன்பதரை (29.5) நாட்கள் ஆகுது. இப்படி நிலா சுத்தி வர்றதால சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வருவதும், அப்புறம் சூரியனுக்கும் நிலாவுக்கும் இடையே பூமி வருவதும் மாத்தி மாத்தி நடக்கும்.

பூமி மேல சூரிய ஒளி படுறதைப் போல, நிலா மேலேயும் சூரிய ஒளி படுது. அதனால் ஏற்படற எதிரொளிப்பதான் நிலாவோட வெளிச்சமா நாம பார்க்குறோம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது, அதன் மேல விழும் வெளிச்சத்தை நாம பார்க்க முடியாது. அதனால அந்த நேரத்துல நமக்கு நிலா தெரியாது. இதைத்தான் ‘அமாவசை’னு சொல்றோம்.

அதுக்குப் பிறகு கொஞ்சமா கொஞ்சமா நிலா நகர நகர, அதன் மேல சூரிய ஒளி விழுற பரப்பும் அதிகரிக்கும். அப்போ ஒவ்வொரு நாளும் நிலா வளர்ந்துகிட்டே போறது போல இருக்கும். இதத்தான் வளர்பிறைன்னு சொல்றோம்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு!!



இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.

அதாவது,
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை

ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).

ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்).

ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்).

ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை).

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை).

ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.