பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 26 பிப்ரவரி, 2015

பௌர்ணமியும் அமாவாசையும்..


நிலா பூமியைச் சுத்தி வருதுன்னு நமக்கு தெரியும். அப்படி ஒருமுறை சுத்தி வர இருபத்தி ஒன்பதரை (29.5) நாட்கள் ஆகுது. இப்படி நிலா சுத்தி வர்றதால சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வருவதும், அப்புறம் சூரியனுக்கும் நிலாவுக்கும் இடையே பூமி வருவதும் மாத்தி மாத்தி நடக்கும்.

பூமி மேல சூரிய ஒளி படுறதைப் போல, நிலா மேலேயும் சூரிய ஒளி படுது. அதனால் ஏற்படற எதிரொளிப்பதான் நிலாவோட வெளிச்சமா நாம பார்க்குறோம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது, அதன் மேல விழும் வெளிச்சத்தை நாம பார்க்க முடியாது. அதனால அந்த நேரத்துல நமக்கு நிலா தெரியாது. இதைத்தான் ‘அமாவசை’னு சொல்றோம்.

அதுக்குப் பிறகு கொஞ்சமா கொஞ்சமா நிலா நகர நகர, அதன் மேல சூரிய ஒளி விழுற பரப்பும் அதிகரிக்கும். அப்போ ஒவ்வொரு நாளும் நிலா வளர்ந்துகிட்டே போறது போல இருக்கும். இதத்தான் வளர்பிறைன்னு சொல்றோம்.ஒரு கட்டத்துல பூமியோட இன்னொரு பக்கத்துக்கு நிலா வந்திடும். அப்போ சூரியன பார்த்துகிட்டு இருக்கும் மொத்த பரப்புலயும் சூரிய ஒளிபட்டு எதிரொளிக்கும்போது முழு நிலவை, அதாவது பௌர்ணமியைப் பார்க்கலாம்.
அப்புறம் தொடர்ந்து நகர நகர நிலா மேலே சூரிய ஒளி படுற பரப்பு குறைஞ்சுகிட்டே போகும். அதனால சூரிய ஒளியை எதிரொலிக்கிற நிலவோட பரப்பும் குறைஞ்சுகிட்டே போறதாலே, நாளுக்கு நாள் நிலவு தேயுற மாதிரி இருக்கும். மீண்டும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலா வரும்போது, நிலா மேல சூரிய ஒளி விழுறதை நம்மால பார்க்க முடியாது. அதுதான் அமாவாசை தினம்.

இப்படியாகப் பூமியைச் சுத்தி நிலா தொடர்ந்து நகர்ந்துகிட்டே இருக்கும். அமாவாசையும் பௌர்ணமியும் மாத்தி மாத்தி வந்துகிட்டே இருக்கும்.

கிரகணங்கள்
இப்படிச் சுத்தி வர நிலா எப்போதாவது மட்டும்தான் சூரியன், பூமி இருக்குற ஒரே நேர்க்கோட்டுல வரும். அப்படி வரும்போது கிரகணம் ஏற்படும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும்போது நேர்க்கோட்டில் வந்தா, அந்த நாள்ல சூரிய கிரகணம் நடக்கும். அன்னைக்குப் பூமிக்கு வரும் சூரிய ஒளியை நிலா மறைக்கும். இது அமாவசை அன்னைக்குத்தான் நடக்கும்.
அதேபோல் சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி நேர்க்கோட்டுல வந்தா, அன்னைக்கு நிலா மேல விழும் சூரிய ஒளியைப் பூமி மறைக்கும். அந்த நாளில் சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம். பௌர்ணமி அன்னைக்குத்தான் இது நடக்கும்.

பூமியோட நிழல் படற நேர்க் கோட்டுப் பகுதியில நிலா நுழைய ஆரம்பிச்சதும் கொஞ்சம், கொஞ்சமா அது மறையும். நேர்க்கோட்டுப் பகுதியை விட்டு வெளியே வரும்போது, மீண்டும் நிலா தெரிய ஆரம்பிக்கும். இதுதான் சந்திர கிரகணம்".

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே ஒரு நேர்க்கோடு வரைஞ்சா, அதே நேர்க்கோட்டுல நிலாவோட மையப் புள்ளி கடந்து போக நேரிட்டால் அன்னைக்கு முழு கிரகணம் ஏற்படும். அப்படியில்லாம நிலாவோட மையப் புள்ளி நேர்க்கோட்டுக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கும் போகும்போது முழுமையாக மறைக்கப்படாது. அன்னைக்குப் பகுதி கிரகணத்தைதான் பார்க்க முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக