பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

என்ன பட்டம் வேணும் !!!

சமீபத்துல நடிகர்களுக்கு அவங்களுடைய பெயருக்கு முன்னாடி போட்டுக்குற "பட்டம்" ங்களை பத்தி ஒரு செய்தி படிச்சேன்..


சூப்பர் ஸ்டார் ,,லிட்டில்  சூப்பர் ஸ்டார்சுப்ரீம் ஸ்டார் ,அல்டிமேட் ஸ்டார் , ஸ்டைலிஷ் ஸ்டார் ,பவர் ஸ்டார் ,சோலார் ஸ்டார் -னு அட!! அட!! அட !! வானத்துல கூட எண்ணமுடியாத ஸ்டார்களை நாம திரையுலகத்துல பாக்கலாம்.ஸ்டார்  மட்டும் இல்லாம வேறு பெயர்கள் நடிகர் திலகம்,நடிகையர் திலகம்,இளைய திலகம்,நாட்டியப்பேரொளி,இளைய தளபதி,தல, சின்ன தளபதி,புரட்சி தளபதி, மக்கள் நாயகன்,உலக நாயகன்,சின்ன கலைவாணர் ,வைகை புயல் ,இளம் புயல்,இசைப் புயல்,இசைஞானி,இசை மேதை-னு  எத்தன ......."ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறமாதிரி"னு ஒரு ஒரு படத்துலயும் உயிரை பணயம் வச்சு நடிக்குற உலகப்புகழ் ஜாக்கி ஜானே தன்னுடைய பெயருக்கு முன்னாடி எந்த பட்டமும் போட்டுக்குறது இல்ல..

சரி..பட்டங்களை அவங்களா வச்சுக்கிட்டாங்களோ இல்ல ரசிகர்கள் ஆசைப்பட்டு வச்சாங்களோ அதோட இருக்க வேண்டியது தானே..எதுக்கு இன்னோர் நடிகரோட 'பட்டதை' இவங்க ஏற்க்கனும்னு நினைக்குறாங்கன்னு தெரியல..அதுவும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு இருக்குற போட்டி இருக்கே...

ஒரு பேனாவுக்கான அழகான விளம்பரம் "  மாணவி அறிவியல் ஆசிரியை நடத்தும் பாடத்தை கவனிக்காம இயற்கையை கவனிச்சுக்கிட்டு கவிதை எழுதுகிட்டு இருப்பா,அதை பார்க்கும்  ஆசிரியை அடுத்த ஷேக்ஸ்ஃப்பியர் ஆகப்போறியானு கேட்க இல்ல மிஸ் ,முதல் அனிதா ஆகப்போறேன்"னு  பதில் சொல்லுவா..எவ்வளவு அழகான அர்த்தமுள்ள வார்த்தைகள்..

இன்னோர்தங்க இடத்தை நாம நிரப்பக்கூடாது , ஏதோ ஒரு வகையில ரசிகர்களோட மனசுல நீங்கா இடம்  பிடிச்ச (ரொம்ப) புகழ் பெற்ற அழியா வகையில சாதிச்சு தான் இருந்த துறையில தனக்கு மட்டும் பெருமை சேத்துக்காம தான் இருந்த துறைக்கே பெருமை தேடி தந்த  திரைத்துறையினருக்கு வழங்கப்பட்டப்  பட்டங்கள் இப்போ யார் வேணும்னாலும் எந்த பட்டம் வேணும்னாலும் வச்சுக்கலாம்ங்குற நிலைமைக்கு போய் இப்போ அந்த பட்டத்துக்கு மதிப்பே இல்லாம போச்சு..

ஒரு சூப்பர் ஸ்டார் தான் இருக்க முடியும்..ஒரு உலக நாயகன் தான் இருக்க முடியும்,ஒரு  நடிகர் திலகம் தான் இருக்க முடியும் ..அதே மாதிரி தான் எல்லா பட்டங்களும்..அத விட்டுட்டு அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லிக்குறது இல்ல சின்ன சூப்பர் ஸ்டார்னு சொல்லிக்குறது அடுத்த அல்டிமேட் ஸ்டார்னு சொல்லிக்குறது இல்ல சின்ன அல்டிமேட் ஸ்டார்னு சொல்லிக்குறது,அடுத்த உலக நாயகன்னு சொல்லிக்குறது ,இல்ல சின்ன உலக நாயகன்னு சொல்லிக்குறது,அடுத்த இளைய தளபதினு சொல்லிக்குறது இல்ல சின்ன இளைய தளபதினு சொல்லிக்குறது இதுலாம் வேணாம்..எப்பவும் தனித்து இருங்க..உங்களுக்குனு தனி திறமை இருக்கு,உங்களுக்குனு தனி ஸ்டைல் இருக்கு..அதை இன்னோர்தங்க கூட நீங்களே ஒப்பிட்டுக்காதீங்க..மத்தவங்க ஒப்பிட்டு பேசுறதுக்கும் அனுமதிக்காதீங்க...தனித்து ஜொலிங்க..அதுதான்  அழகு,அதுதான்  பெருமையும் கூட...கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக