பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மண்பானை தண்ணீரின் குளிர்ச்சுக்கு காரணம் என்ன?


தண்ணியோட கொதிநிலை 100 டிகிரி செல்சியஸை அடையறப்ப ஆவியாகுது. ஆனால், சாதாரண வெப்பநிலையிலும் நீர் ஆவியாகிட்டுதானே இருக்கு. கடல், ஆறு, ஏரி, குளங்களோட மேல்மட்டத்துல உள்ள தண்ணி சாதாரண வெப்பநிலையில், அதன் அளவுக்கு ஏற்ப தொடர்ந்து ஆவியாகிட்டே இருக்கும். அதனாலதான் நமக்கு மழை கிடைக்குது. அதே தண்ணியை பாத்திரத்துல ஊத்தி கொதிக்க வைச்சா தண்ணியோட வெப்ப நிலை உயரும்போது, ரொம்ப வேகமா ஆவியாகும். சாதாரண வெப்பநிலைல அதே ஆவியாதல் மெதுவா நடந்துகிட்டே இருக்கும்.

இப்படி சாதாரண வெப்ப நிலைல எப்போதும் ஆவியாதல் நடக்கிறதாலதான் துவைச்சுப் போடுற ஈரத் துணிகளும் காய்கின்றன. கை, கால்களை கழுவிய பின்னாடி துடைக்காவிட்டாலும்கூட கொஞ்ச நேரத்துல கை, கால்கள் உலர்ந்து போவதற்கும் இதுதான் காரணம்.அதேபோலத்தான் மண்பானைல ஏராளமான நுண்துளைகள் இருக்கு. அந்த நுண்துளைகள் வழியே கொஞ்சம் தண்ணி வெளியேறி ஆவியாகிக்கிட்டே இருக்கும். அப்படி ஆவியாகத் தேவையான வெப்பத்தை பானைக்குள் இருக்குற தண்ணிலேர்ந்து எடுத்துக்கும். இதனால மண்பானைல இருக்குற நீரின் வெப்ப அளவு குறைஞ்சிடுது. அதனால மண்பானைல ஊத்துன தண்ணி கொஞ்ச நேரத்துல ஜில்லுனு ஆயிடுது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக