பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 17 நவம்பர், 2015

தெரிஞ்சுப்போமே,

-உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டம் ஆப்பிரிக்கா.

-உலகின் மிக நீளமான நதியான நைல் நதி இந்தக் கண்டத்தில்தான் ஓடுகிறது.

-சாய்ரே, நைஜர், சாம்பேசி என மூன்று பெரிய நதிகளும் இந்தக் கண்டத்தில்தான் இருக்கின்றன.

-உலகின் மிகப் பெரிய பாலைவனமான சகாரா இங்குதான் உள்ளது. கலஹாரி, நமீபியா ஆகிய இரு பெரிய பாலைவனங்களும் ஆப்பிரிக்காவிலேயே உள்ளன.

- 14,300 வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர்.

- இந்தக் கண்டத்தில் இஸ்லாம், கிறிஸ்தவ மக்களே அதிகம் உள்ளனர்.

- ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய சிகரம் ‘கிளிமாஞ்சரோ’. இதன் உயரம் 5,895 மீட்டர்.

- இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய ஏரி ‘விக்டோரியா’. இதன் பரப்பு 68,800 சதுர கிலோமீட்டர்.

-மக்கள்தொகை அடிப்படையில் இந்தக் கண்டத்தில் உள்ள பெரிய நாடு ‘ நைஜீரியா’. 11 கோடியே 50 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள்.

- ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர் யானை போன்ற அரிய வகை விலங்குகள் இக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக