பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 21 ஜூன், 2015

மிளகாய் வரலாறு:

செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி!

குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு.7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டுவிட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம். 1,493-ம் ஆண்டில் கொலம்பஸ் மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்ஸ் சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர். அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விஷயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர்.



போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது. இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது. இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை. மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமேதான்.

காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன.

மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை இந்தியப் பெண்களையேச் சேரும்.


                                                    -- நன்றி விகடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக