பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 7 ஜனவரி, 2015

குங்குமம் தயாரிப்பது எப்படி??


மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்க கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்க வேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும்.

இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி. குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது.தலை வகிட்டுமுனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.இதனைநெற்றிக்கண் எனலாம்.இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.

குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மைநமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடு தான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக