பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கோயில் கோபுர உண்மைகள்

 “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” னு சொல்றதை கேள்விப்பட்ருக்கேன் .அதுக்குள்ள எவ்வளவு அர்த்தங்கள் இருக்குனு இத படிச்சதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அப்போலாம்  ஊர்ல கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாதுனு  சொல்வாங்க.கோவில்களையும்  அதோட உயரமான கோபுரங்களையும் அதுக்கு  மேல இருக்கும் கலசங்களையும் பாக்குறோம்.அதுக்கு என்ன காரணம்?இதுக்கு  பின்னாடி எவ்வளவு அறிவியல் விஷயம் ஒளிஞ்சிருக்குன்னு தெரியுமா?


கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களில்  கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.


நெல், உப்பு, கேழ்வரகு, தினை,சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணம் வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பதுதான் .

 பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.காரணம் தெரியுமா? அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000 சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

 

                                            ---  நன்றி FB 

2 கருத்துகள்:

  1. மிக சிறப்பான தகவல்கள் பகிர்வுக்கு பாராட்டு. நம் தலைவர்கள் இதன் சிறப்பை அறியாத காரணங்களால்தான் இப்போது உள்ள தானியக் கிடங்ககுளில் உணவுகள் சிரழிந்து கொண்டு இருக்கின்றன

    பதிலளிநீக்கு
  2. இன்று கோபுரங்களே விரிசல் காண்கின்றன ...ஏன்...?

    பதிலளிநீக்கு