எல்லாருமே வாழ்க்கைல ஏதாவது ஒரு வேல செய்யணும். சும்மா அடுப்படில இருக்குறது மட்டுமே வேலையாகவோ இல்ல குழந்தைங்களை பாத்துக்குறது மட்டுமே அவங்களுக்காக எல்லாத்தையும் செய்யுறது வாழுறது மட்டுமே வாழ்க்கையா இருக்க கூடாது.
எல்லா பெண்களுக்குமே கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தைங்கள்னு வரும்போது கண்டிப்பா தன்னுடைய கரியர்-ல இருந்து ஒரு பிரேக் விழும். அது பெண்களா பிறந்த அனைவருக்குமே பொதுவா இருக்க கூடிய வரக்கூடிய ஒரு விஷயம். நம்மள பலபேர் என்ன பண்ணுவோம்னா அதுக்கு அப்பறம் நம்முடைய வாழ்க்கையை அப்படியே போறபோக்குல வாழ்ந்துடுவோம். நமக்குன்னு எதுவும் பண்ணிக்க மாட்டோம். நம்ம உள் அழகையோ வெளி அழகையோ பொருட்படுத்தமாட்டோம். பலபேருக்கு அதான் பிள்ளைங்களை பெத்தாச்சு இல்ல அப்பறம் என்ன இனி நமக்குனு தனியா பாத்துக்கனு இருந்துடுவோம். அதே வகையில தான் நம்முடைய கரியர்-யும் . பிள்ளைங்களை பாக்கணும் பிள்ளைங்களை பாக்கணும்னு நம்ம கரியர் அப்டியே போகிடும். அஞ்சு வருஷம் ஆறு வருஷம் கழிச்சு திரும்பி பாக்கும்போது நமக்கு யாரும் வேல குடுக்க முன் வரமாட்டாங்க.நம்ம படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.அதனால கூட பலபேர் லைஃப் அப்டியே போயிடும்.
நான் கேக்குறது எல்லாம் , படிச்ச படிப்புக்கு மட்டும் தான் வேலை செய்வேன்னு நினைக்காம , சின்ன வேலையா இருந்தாலும் எதாவது ஒரு வேலைய செய்ய ஆரம்பிக்கணும். முதல் அடி எடுத்துவச்சா கண்டிப்பா நம்முடைய குறிக்கோளுக்கு நம்மை கொண்டு சேக்கும் நம்முடைய முயற்சி. எந்த வேலைய செஞ்சாலும் திருப்தியோட சந்தோஷமா செய்யணும்.அதுல இருந்து அடுத்து படி ஏறி போகணும். இனிமே என்னனு சும்மா உக்காந்து இருக்குறதுக்கு ஒரு வேலனு ஒன்னு பண்ணினா நம்முடைய உடம்புக்கும் நல்லது மனசுக்கும் நல்லது. நம்ம மேல நமக்கே confident வரும். நம்ம மேல நமக்கே மரியாதை வரும்.
நான் blogger , youtuber ,என் friend -டோட நாவலுக்கு குரல் கொடுத்துக்கிட்டு இருக்கேன். painting கத்துக்கிறேன் , வீடு கணவன் ,home maker -ஆ இருக்கேன்(அது சாதாரண வேலை இல்ல) ஆனா அதுக்கும் மேல ஏதாவது சம்பாதிக்கிற மாதிரியான ஒரு வேலை பண்ணணுமே....
இந்த மாதிரி யோசிச்சுதான் நான் இங்க டிரைவர் வேலைக்கு சேந்தேன். நம்ம ஊருல ஊபர் மாதிரி இங்க வேற சில கம்பெனிகள் இருக்கு. என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி உன்னால இத செய்ய முடியும் உனக்கும் பிடிச்ச வேல , எவ்வளவு நேரம் செய்யணும்னு நினைக்கிறியோ அவ்வளவு நேரம் செய் உனக்கும் ரிலாக்ஸ் -ஆ இருக்கும். ஒரு experiance கிடைக்கும் அது இதுனு என்ன பிரைன் வாஷ் பண்ணி செய்யவச்சாரு. ஆரம்பத்துல எனக்கு நிறைய கேள்விகள் இருந்தது என் கிட்டையே , நிறைய சந்தேகங்கள் இருந்தது என் மேலையே.தயக்கங்கள் இருந்தது. என்னால முடியுமா? நான் ஏன் இத பண்ணனும்?நான் படிச்சது M.phil computer science , அமெரிக்காவுல இதுக்கு பேர் டபுள் மாஸ்டர்ஸ். இங்கலாம் எவ்வளவு சம்பாதிக்கலாம் தெரியுமா? அதுமட்டும் இல்லாம நம்ம ஊருலதான் கவுரவம் கவுரவம்-னு நாம எல்லாரும் காலை மதியம் இரவு உணவோட கவுரவத்தையும் சேத்து மூளைக்கு சாப்பாடா கொடுத்துக்கிட்டு இருக்கோமே. அந்த சூழ்நிலையிலதான் நானும் வளந்தேன். அப்போ எனக்கும் அது மண்டையில ஊறிபோயித்தானே இருக்கும். அப்போ நான் படிச்ச படிப்பை விட மத்த வேலை செய்ய எனக்கு மனசு வரல. யோசிக்குறேன், யோசிக்கிறேன், ரொம்ப யோசிக்கிறேன்.நம்ம ஏன் செய்யணும்னு முதல்ல யோசிச்சேன், நம்ம செய்யணுமானு அப்பறம் யோசிச்சேன், அப்பறம் நம்மால செய்ய முடியுமானு யோசிச்சேன். அடுத்து சரி போ செஞ்சிதான் பாப்போமேனு யோசிச்சேன்.
முதல்ல டிரைவர் வேலை செய்ய ஆரம்பிச்சபோது நிறைய தடு மாற்றம் இருந்தது. ரூட் தெரியாது.தப்பான ரூட் போய்டுவேன். அந்தமாதிரிலாம் இருந்தது . அப்பறம் போக போக பிக்கப் பண்ணிக்கிட்டேன். இந்த வேலையில என்ன வசதினா எப்ப வேணும்னாலும் ஆன்லைன் போயிக்கிலாம் , ride பிக்கப் பண்ணிக்கலாம். எப்போ வேணும்னாலும் offline போயிக்கிலாம்.இவ்வளவு நேரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இத்தனை நாள் பண்ணனும்னு அவசியம் இல்ல. எல்லாமே நம்முடைய இஷ்டம் தான். அந்த வகையில எனக்கு ரொம்பவே வசதியா இருந்தது.
நான் ஒரு நாளைக்கு குறைஞ்சது 1.30 மணி நேரம் ride எடுப்பேன். அதிகமா 3.30 மணி நேரம் ride எடுப்பேன். என் பொண்ணு எனக்காக காத்துக்கிட்டு இருப்பா வீட்ல அதனால 3.30 மணிநேரம் மேல நானும் வீட்டுக்கு வந்துடுவேன்.காலைல சமைச்சு வச்சுட்டு வேலைக்கு கிளம்புவேன். அப்படி இந்த வேலைய செய்ய ஆரம்பிச்சு 4 மாசம் ஆகுது.இன்றோடு என்னோட 200வது ரைடு முடிச்சிருக்கேன். இந்த வேலை செஞ்சாலும் என்னுடைய படிப்புக்கான வேலையும் தேடிக்கிட்டே தான் இருந்தேன். என்னுடைய friend உதவியால நான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சிருக்கு இப்போ.
இந்த 4 மாசத்துல 200 ride -கள்.எல்லாம் 5 ஸ்டார் review-ல். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. சில நாள் சூப்பர்-ஆ இருக்கும்.சில நாள் சுமாரா இருக்கும்.கிட்டத்தட்ட 220 புது மக்களை பாத்துருப்பேன்.220 புது மனுஷங்கக்கிட்ட பேசிருப்பேன் பழகிருப்பேன். ஒரு ஒருத்தங்களும் வித்யாசமானவங்க. சிலபேர் நல்லா பேசுவாங்க ,சிலபேர் ஒரு வார்த்தைகூட பேசமாட்டாங்க. சில பேர் கேள்வியெல்லாம் கேப்பாங்க, சில பேர் நா கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுவாங்க. சில பேர் அவசர அவசரமா வேலைக்கு போவாங்க. சில பேர் அப்பாடா என் வீட்டுக்கு போய் என்னுடய சோஃபா-ல தலையை வைக்கணும்னு சொல்லி அவ்வளவு சோர்ந்து வருவாங்க. விடிய காலைல வேலைக்கு போறவங்களையும் கொண்டுபோய் விட்டுருக்கேன், லேட் நைட் வீட்டுக்கு வேலையில இருந்து திரும்பி வர்றவங்களையும் கொண்டு போய் வீட்ல விட்ருக்கேன். சில பேர் எனக்கு வேலைக்கு டிப்ஸ் கொடுப்பாங்க.சில பேருக்கு வேலைக்கு நான் டிப்ஸ் தந்துருக்கேன்.இங்க வேலை இருக்கு. இந்த கோர்ஸ் பண்ணு, இந்த வேலை ட்ரை பண்ணலாம்னு suggest பண்ணுவாங்க. சில பேர் சந்தோஷமா சிரிச்சுகிட்டே வருவாங்க.சில பேர் சோகமா வெளில வெறிக்க பாத்துக்கிட்டே வருவாங்க. சில பேர் சந்தோஷமா டிப்ஸ் (பணம்) குடுப்பாங்க. இப்படி எவ்வளவு வித்யாசமான மனுஷங்களை சந்திச்சேன், பேசினேன் .
இந்த வேலை மூலமா தெரியாத ரூட் தெரிஞ்சுக்கிட்டேன், எத்தனையோ தெரு பேர்களை தெரிஞ்சுக்கிட்டேன். எத்தனையோ அழகான community -களை பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எவ்வளவோ அழகான வீடுகளையும் வீடு இருக்குற இடங்களையும் பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எந்த வேலையும் ஈஸி இல்லனு தெரிஞ்சுகிட்டேன். எந்த வேலையும் குறைவான வேலை இல்லனு தெரிஞ்சுக்கிட்டேன்.எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒரு அழகான புது அனுபவம் இந்த வேலை எனக்கு குடுத்தது.
இந்த அனுபவம் கிடைக்க காரணம் என்னுடைய கணவர் தான். என்னைவிட என் மேல நம்பிக்கை வச்சு உன்னால முடியும் செய்னு என் பின்னாடி இருந்து என்ன எப்பவுமே முன்னாடி தள்ளுற இந்த மாதிரி ஒரு ஆண் எல்லா பெண்ணுக்கும் பின்னாடி ஒரு comrade -ஆ இருக்கணும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக