ஹார்வர்ட் மெடிக்கல் பள்ளியில டாக்டர் ஆல்பர்ட் எட்ஜ் தலைமையில காது கேளாமை பத்தி ஆராய்ச்சி ஒன்னு நடந்துகிட்டு இருக்காம்.இந்த ஆராய்ச்சியின் படி ,காது கேக்காத எலிகளுக்கு இவங்க கண்டுபிடிசிருக்குற மருந்துகள் கொடுப்பதன் மூலமா ஒலி கேக்குற திறன் கொண்ட புதிய மயிர் அணுக்களை வளர வைக்க முடியும்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
காதுக்குள்ல இருக்குற ஒலி கேக்குற திறன் கொண்ட மயிர் அணுக்கள் பழுதுபட்டுட்டா அத திரும்ப புதுப்பிக்கமுடியாதுன்னு இது நாள் வரை மருத்துவர்கள் நினைச்சாங்க.ஆனா இந்த மருந்து மூலமா புதுப்பிக்க முடியும்னு நம்பிக்கை வந்துருக்கு.
இவங்களோட முந்தைய கண்டுபிடிப்புல காதுக்குள்ல ஒலி கேக்குற பாதையில மாற்றம் செஞ்சா காது கேக்குற வாய்ப்பு அதிகரிக்கும்னு தெரியவந்தது.ஒலி கேக்குற பாதையில தடையை ஏற்படுத்துறதால ஏற்கனவே ஒலி கேக்குற திறன் கொண்ட அணுக்களில் இருந்து புது அணுக்கள் உருவாகுறது இல்ல .மாறாக அதுக்கு பக்கத்துல இருக்குற எல்ஜிஆர்-5 என்ற ஆதரவு அணுக்களில் ஒலி கேக்குற புதிய அணுக்கள் உருவாக்கப்படுது.இதன் மூலமா காது கேக்குற திறன் குறைவு மற்றும் காத்து கேளாமை பிரச்சனையை குணப்படுத்த முடியும்னு நம்பிக்க வந்துருக்கு.
நல்ல விஷயம்தானே ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக