வல்க்ரோ ( Velcro ) ,அதாவது நம்ம செருப்பு,bag இதுலலாம் ஒரு ஒட்டும் பட்டை இருக்கு இல்லையா அதுக்கு பேர் தான் இந்த வல்க்ரோ ...இத யார் கண்டுபிடிச்சாங்கனு தெரியுமா?
ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால்-ங்குற பிரெஞ்ச் என்ஜினீயர் ,ஒரு சமயத்துல காட்டுப் பகுதியில நடந்துபோயிட்டு இருந்தப்போ அவரோட சாக்ஸுல காட்டுத் தாவரங்களோட விதைகளும் முட்களும் ஒட்டிக்குறத கவனிச்சுருக்கார்..
தாவரத்தோட பகுதிகளால எப்படி இப்படி ஒட்ட முடிஞ்சதுனு ஒரு லென்ஸ் மூலமா அதப்பாத்தப்போ துணில ஒட்டிகுற வகைல அதுல சின்ன சின்ன முட்கள் இருக்குறதை கண்டுபிடிச்சுருக்கார்.இதே ஐடியா வச்சு ஒட்டுற பட்டையை உருவாக்க முடியுமான்னு யோசிச்சார்..இதுக்காக பல வருஷம் கடுமையா உழச்சார் ...
ரெண்டு துண்டு துணிகளை பயன்படுத்தி ஒன்னுல நூத்துக்கணக்கான சின்ன கொக்கிகள் இன்னோன்ணுல நூத்துக்கணக்கான சின்ன வளைவுகள் இருக்குறமாதிரி அமைச்சு அது ரெண்டையும் ஒன்னு சேத்து பாத்தப்போ அது அருமையா ஒட்டிக்குச்சு .இழுத்தா ரெண்டு துணியும் பிரிஞ்சது..
இந்த கண்டுபிடிப்புக்கு வல்க்ரோ ( Velcro )-னு பேர் வச்சு 1957-ல டீ மெஸ்ட்ரால் அதுக்கு காப்பி ரைட் வாங்கிட்டார்..
இந்த வல்க்ரோ பலவகையான உடைகள்ல கூட பயன்படுத்தப்படுதுங்குறது கூடுதல் விஷயம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக