என்ன இது ,ரயில் நிலையம் பேருந்து நிலையம் மாதிரி மின்சார நிலையம்னு சொல்றேன்னு பாக்குறீங்களா?
பின்ன..அவரவருக்கு தேவையான மின்சாரத்தை அவரவரே ஒரு இயந்திரம் மூலமாக தயார் செஞ்சுக்கலாம்னா மின்சார நிலையம்னு சொல்லலாம் இல்ல.
கே.ஆர் ஸ்ரீதர் - யார் இவர் ?
ஊர் - திருச்சி
படித்து - ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ் (இப்போ NIT )
பிரிவு -மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மேற்படிப்பு - இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் நியூக்ளியர் இன்ஜினியரிங் -அமெரிக்கா ,மேலும் அங்கேயே ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் .
வேலை-நாசா விண்வெளி மையத்தில் ,அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குனர் .
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா ?அதற்க்கு தேவையான சாத்தியக்கூறுகளை கண்டுபிடிக்குறது தான் இவரோட வேலை.அதுலயும் முக்கியமா மனிதன் சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் தயார் செய்ய முடியுமா-னு ஆராய்ச்சி பண்ணினார்.ஆனா அமெரிக்க அரசாங்கம் ஆராய்சியை கைவிட்டுடுச்சு.
அரசாங்கம் கைவிட்டாலும் ,தான் செய்த ஆராய்சியை கைவிட விருப்பம் இல்ல இவருக்கு. என்ன செஞ்சார் ? அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்சில் செஞ்சு பாத்தார்.அதாவது ,எதோ ஒன்னுல இருந்து ஆக்சிஜனை உருவாக்கி வெளிய எடுக்குறதுக்கு பதிலா ,அத ஒரு இயந்திரதுக்குள்ள அனுப்பி அதோட இயற்கையா கிடைக்குற எரி சத்தியை சேர்த்தா என்ன நடக்குதுனு பாத்துருக்கார் .அவருக்கு கிடச்ச அவுட்புட் என்ன தெரியுமா ? மின்சாரம்.
இனிமே அவரவர் அவரவருக்கு தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலமா தயார் செஞ்சுக்கலாம்.
ஆனா, இந்த இயந்திரத்தை வர்த்தக ரீதியா தயாரிக்கணும்னா அதுக்கு பணம் அதிகமா செலவு ஆகும்.இவருக்கு ஜான் டூர் -அப்டீங்குற ஒரு ஸ்பான்சர் கிடச்சுருக்கார் .
இவரோட கண்டுபிடிப்பு சிறப்பு என்னனா - சுற்று சூழலுக்கு உகந்தது.மின் இழப்பு இல்ல.
8 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு பின்னர் , 'ப்ளும் பாக்ஸ்' -எனும் மின்சார உற்பத்தி பெட்டி தயாராகிடுச்சு.
10 முதல் 20 அடி உயரம் உள்ள இரும்புப் பெட்டிதான் இவர் உருவாக்கி உள்ள இயந்திரம்.இதுல ஆக்சிஜனையும் இயற்க்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் மின்சாரம் கிடைக்குது.
பெட்ரோலிய எரிவாயுவுக்கு பதிலா மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாமாம் .
சூரிய ஒளியை பயன்படுத்தலாம்.
கட்டடத்துக்கு வெளில வச்சுக்கலாம்.இந்த 'ப்ளும் பாக்ஸ்' மூலமா எந்த மூலையிலும் மின்சாரம் தயாரிக்கலாம்.
இப்போ ஒரு 'ப்ளும் பாக்ஸ்' இருந்தா ரெண்டு வீடுக்கான மின்சாரம் தயாரிக்கலாம்.
இப்போ அமெரிக்காவுல 20 நிறுவனங்கள் இந்த 'ப்ளும் பாக்ஸ்' மூலமா மின்சாரம் தயாரிக்குறாங்க.கூகிள் ,வால் மார்ட் ,கோக்கோ கோலா ,அடோப் சிஸ்டம்,சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனம் இந்த 'ப்ளும் பாக்ஸ்' உபயோகிக்குறாங்க.
இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

கே.ஆர் ஸ்ரீதர் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி...
நன்றி.. நம்ம ஊருக்கு வருமா
பதிலளிநீக்கு