பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 5 ஜனவரி, 2013

மார்கழி மாச கோலம்


                                              அம்மாவோட மார்கழி மாச கோலம்



மார்கழி மாசத்துல , வீட்டு வாசல்ல  கோலம் போட்டு,  நடுவில்சாணம் வச்சு , அதில, பறங்கி பூவை வைக்கறது நம்ம  வழக்கம். அது ஏன்னு தெரியுமா? 

மஞ்சள் நிறத்துல பறங்கிப்பூ இருக்கறதால , அதை வைக்குற வீட்ல , மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும்ங்கறது  நம்பிக்கை. பூமலர்ந்து இருக்குறதால அது மாதிரி , வீட்ல இருக்குறவங்க சந்தோஷமா இருப்பாங்க . மாட்டுச் சாணம் கிருமி நாசினிங்கறதால , வீட்ல இருக்குறவங்களுக்கு  ஆரோக்கியம் தரும். 

கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” சொல்றாரு.

அப்படீன்னு அத ஏன் நல்ல மாசம் இல்ல பீடை மாசம்னு சொல்றோம்னு கேக்கலாம்.அது பீடை மாசம் இல்ல… பீடுடைய மாசம்  (அதாவது செல்வம் நிறைந்த  மாசம்) என்பது தான் கொஞ்சம் கொஞ்சமா  மருவி  பீடை மாசம்னு  ஆகிடுச்சாம்.

நம்மோட சம்பிரதாயப்படி, ஆடி, புரட்டாசி, மார்கழி மாசங்கள்ல கல்யாணம் வேற பல சுப நிகழ்ச்சிகள் நடத்துறது இல்ல. காரணம் என்னனா  இந்த மாசம் எல்லாம் முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்குனு  ஒதுக்கப்படவேண்டிய மாசங்கலாம் . அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்ததாம் .

மார்கழி மாசங்கறது தேவர்களது ஒரு நாளுல விடியற்காலை பொழுதாம். விடியற்காலை அப்படீனாலே மங்களகரமானது. அதனாலதான் மாசம் முழுசும்  இறை வழிபாட்டுக்குனே  பெரியோர்கள் ஒதுக்கி வச்சு இருக்காங்கலாம். இந்த மாசத்துல, சுபநிகழ்ச்சி நடத்தினா , வழிபாடு பாதிக்கும்கறதால ,இந்த மாசத்துல விசேஷம் எதையும் நடத்த  மாட்டாங்களாம் . மார்கழி மாசத்த , “மார்கசீர்ஷம்” அப்படீன்னு வட மொழியில் சொல்வாங்களாம். “மார்கம்” அப்படீனா வழி, “சீர்ஷம்” அப்படீனா உயர்ந்த. “வழிகளுக்குள் தலைசிறந்தது” அப்படீங்கறது அர்த்தமாம்.

வருஷத்துல மத்த நாட்கள்ல கோவில்களுக்கு போக முடியாதவங்க இந்த மார்கழி மாசத்துல மட்டும் கோவிலுக்கு போனாலே வருஷம் முழுசும் கோவிலுக்கு போன பலன் கிடைக்குமாம்.

       மார்கழி மாசத்துலஅதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் போகனும்னு சொல்றதுக்கு ஒரு அறிவியல் காரணமும் இருக்கு . மார்கழி மாதத்தில் அதிகாலைல சுத்தமான ஓசோன் வாயுவை சுவாசிக்க முடியும்  . இது புத்துணர்ச்சி தரும். மார்கழி மாச காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் ரொம்ப நல்லது.கோலம் போடறதால பாட்டு பாட்றதால மனசு ஒருமை படுத்த முடியும் .அரிசி மாவால கோலம் போடறதால எறும்பு,குருவி மாதிரி ஜீவராசிகள் அத சாப்பிட்டு வாழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக