டால்பின் நம்ம எல்லாருக்குமே பிடிச்ச ஒரு விலங்கு.சரிதானே.டால்பின் பாலூட்டி வகையை சேந்தது.37 வகை டால்பின்கள் இருக்காம் மொத்தம். அதுல 32 வகை டால்பின்கள் கடலில் வாழுது.5 வகை டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன.டால்பின்கள் கடல் மட்டத்தில் இருந்து 260 மீட்டர் ஆழம் வரை வாழும் தன்மை பெற்றது.அது சுவாசிப்பதற்காக அடிக்கடி கடல் மட்டதிற்க்கு வந்து டைவ் அடித்துவிட்டு செல்லுமாம்.
ஆபத்து சமயங்களில் 15 நிமிடம் வரை தண்ணீரில் மூழ்கி இருக்குமாம்.டால்பின்கள் எகொலோகேசன் எனும் முறையில் எதிரொலி முறைப்படி உணவு தேடல் மற்றும் இடபெயர்சியை மேற்கொள்ளுமாம்.'கில்லர் வேல்' என்று அழைக்கப்படும் ஆர்கா டால்பின்கள் தான் டால்பின்கள் இனத்துலையே ரொம்ப பெரியதாம்.இவை 6 . 1 மீட்டர் நீளம் வரை வளர கூடியதாம்.
'பட்டன் நோஸ்' என்று அழைக்கப்படும் டால்பின் வகை ரொம்ப பிரபலம்.இதுதான் நாம டி.வி ,கண்காட்சியில் பாக்குற துருதுருனு விளையாடுமே அந்த டால்பின்களாம்.இது மனுஷங்களோட ரொம்ப ஜாலியா பழகுமாம்,ரொம்ப சூப்பரா நம்மளை மாதிரியே விசில் அடிக்குமாம்.பலவிதமான சத்தத்தின் மூலமா மற்ற டால்பின்களோட தொடர்பு கொள்ளுமாம்.இதோட உடல் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் .
இதோட தோலுக்கு அடியில இருக்குற பிளப்பர் என்னும் கொழுப்பு அடுக்கு இதோட வெப்பநிலையை கட்டுக்குள்ள வைக்குதாம்.டால்பின்கள் மணிக்கு 5 முதல் 2 கிலோ மீட்டர் தூரம் நீந்தக்கூடியது.அதிபட்சமா 32 கிலோ மீட்டர் தூரம் நீந்துமாம். இதோட வேகம் அதோட வகை ,சூழல் பொருத்து மாறுமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக